காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம்
27 Nov 2025, 3:11 pm
<p>ஈரோடு, நவ.27- காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு டாஸ்மாக் ஊழி யர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தர வின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப் பைக் கருத்தில் கொண்டு, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்க ளிடமிருந்து கூடுதலாக ரூ.10 பெற்று, பாட்டிலை திரும்பத் தரும்போது அதை திருப்பி அளிப்பதே இத் திட்டமாகும். நீலகிரி, கோவை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங் களில் சோதனை ஓட்டமாக அமல் படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு, டாஸ் மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். திட்டத்தை நடைமுறைப்படுத் தும் கடைகளில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு கடுமையான வேலைப் பளு, இட நெருக்கடி, கூடுதல் பதி வேடு பராமரித்தல், சில்லறை பிரச் சனை, அசுத்தமான பாட்டில்க ளால் சுகாதாரக் கேடு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக ஊழியர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள் ளது. இந்நிலையில், வரும் நவம்பர் 28, 2025 முதல் ஈரோடு மாவட்டத்தி லும் இத்திட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள் ளது. இது தொடர்பாக நடந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்ற எல்பிஎஃப், சிஐ டியு, ஏடிபி, பிடிஎஸ், பிஎம்எஸ் உள் ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்க ளும், “எச்சில் பாட்டிலை எக்காரணம் கொண்டும் திரும்ப வாங்க மாட் டோம்” என்று திட்டவட்டமாகத் தெரி வித்து, மாவட்ட மேலாளரின் சமா தானத்தை நிராகரித்து கூட்டத்தைப் புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து, அனைத்து சங்கங்களின் தலைவர்களும் ஒன்று கூடி, திட்டத்திற்காக வழங்கப்பட்ட அனைத்துப் பதிவேடுகளையும், ஸ்டிக்கர்களையும் மாவட்ட மேலா ளர் அலுவலகத்தில் ஒப்படைப்பது என்று முடிவெடுத்துள்ளனர். காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத் தை ஊழியர்கள் கொண்டு அமல்ப டுத்த நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்று அவர்கள் வலியுறுத்தியுள்ள னர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.</p>
