பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்</strong></p>
<p>உதகை, பிப்.17- பணி நிரந்தரம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாயன்று டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். காலி மதுபாட்டில் களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண் டும். ஊழியர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி, டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் செவ்வாயன்று முதல் காத்திருப்புப் போராட் டம் துவங்கியது. அதன்ஒருபகுதியாக, நீல கிரி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் ஜே.ஆல்தொரை தலைமை வகித்தார். இதில் விற்பனையாளர் சங்க மாநிலப் பொரு ளாளர் ராமகிருஷ்ணன், சிஐடியு செயலாளர் மகேஷ், ஏஐடியுசி நிர்வாகி விஜயராஜ் உட்பட திரளான டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று, கோவை வடக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் மற் றும் தெற்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற வாயிற் கூட்டத்தில், ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஜான் அந்தோணிராஜ், செந்தில்பிரபு, ராமகிருண் ணன் உட்பட திரளான டாஸ்மாக் ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.</p>
