தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை முறைப்படுத்தக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

5 Dec 2025, 4:21 pm
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை முறைப்படுத்தக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை முறைப்படுத்தக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தருமபுரி, டிச.5- மதுபான காலிப்பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை முறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி &nbsp;வெள்ளியன்று டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலி மதுபானப்பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில், டாஸ் மாக் ஊழியர்களை பயன்படுத் தக்கூடாது. இத்திட்டத்தை முறைப் படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தர வின் படி அனைத்து ஊழியர்களை யும் பணி நிரந்தரம் செய்ய வேண் டும். அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளியன்று அர்ப்பாட் டம் நடைபெற்றது. தருமபுரி டாஸ் மாக் மாவட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஏ. மகேந்திரன் தலைமை வகித்தார். &nbsp;இதில் மாவட்ட துணைச்செயலா ளர் எம்.ரங்கநாதன், பொருளாளர் சி.மணி, பாட்டாளி தொழிற்சங்க மாநிலச் செயலாளர் வ.முருகை யன், விற்பனையாளர் சங்க தலை வர் அதிபதி, டிடிபிடிஏ மாவட்டத் தலைவர் சிவாஜி, டிஎன்ஜிடியு மாவட்டச் செயலாளர் கேசவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் ஜான் அந்தோணி ராஜ் தலைமை ஏற்றார். இதில், சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செய லாளர் செந்தில் பிரபு, பொருளாளர் ராமகிருஷ்ணன், டிடிபிடிஎஸ் நிர் வாகி ஜீவா, டாஸ்மாக் விற்பனையா ளர்கள் சங்க சார்பில் மாரிமுத்து, &nbsp;மதியழகன், &nbsp;கடை மேற்பார்வையா ளர்கள் சங்கம் சார்பில் வடிவேல், அரசு பணியாளர்கள் சங்கம் சார் பில் ராமானுஜம் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி &nbsp;திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஆல் தொரை தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் வினோத், மாநிலக்குழு உறுப்பினர் &nbsp;நவீன் சந்திரன், மகேஷ், எல்பிஎப் நிர்வாகிகள் கணேஷ், ராமகிருஷ் ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.