பணி நிரந்தரம் செய்திடுக: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
12 Jun 2026, 10:21 pm
<p><strong>பணி நிரந்தரம் செய்திடுக: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>கோவை, ஜூன் 12- தற்காலிகமாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை உடனடி யாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர் கள் கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறு வனமான டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகாலமாக பணிபு ரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர் களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைக ளுக்கு பொருந்தும் 500 மீட்டர் தூரக் கட்டுப்பாட்டை, FL2 எனப்படும் மன மகிழ் மன்றங்களுக்கும் அமல்படுத்த வேண்டும். காலி பாட்டில்களை திரும் பப்பெறுவதற்கு ஒப்பந்ததாரரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜான் அந்தோ ணிராஜ் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர். வேலுசாமி, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில் பிரபு, பொருளாளர் ராமகிருஷ்ணன், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைவர் ராக்கி முத்து, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கணேசன், விற் பனையாளர் சங்க சுதாகர், கடை மேற் பார்வையாளர் சங்க முத்துப்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
