தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்

16 May 2026, 1:06 am
ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்

ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்

​​​​​​​கோவை, மே 15- டாஸ்மாக் ஊழியர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணி யாற்றி வரும் ஊழியர்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை பாது காக்கும் வகையில், அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்.

புதி தாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உத்தரவின் பேரில், மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர் கள் மற்றும் தற்போது பணியி லுள்ள ஊழியர்களின் நலனை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 22 ஆண்டு களாக பணியாற்றி, தற்போது கடைகள் மூடப்பட்டதால் வேலை யிழந்த பணியாளர்களுக்கு, தமிழக அரசின் மற்ற அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் முன்னுரிமை அளித்து நிரந்தரப் பணி வழங்க வேண்டும்.

500 மீட்டர் விதிமுறைக்கு உட்பட்டு அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது போலவே, எப்எல்2 எனப்படும் தனி யார் மனமகிழ் மன்றங்களையும் உடனடியாக மூடுவதற்கு அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

மூடப்பட்ட அரசு கடைகளில் உள்ள மீதமுள்ள மதுபான சரக்கு களை டாஸ்மாக் நிர்வாகமே தனது சொந்தப் பொறுப்பில் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற் கான ஏற்றி, இறக்கும் கூலி மற்றும் வாகனச் செலவுகளை ஊழியர்கள் மீது திணிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட் டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி தலைமை வகித்தார்.

இதில் சிஐ டியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் ஜான் அந்தோணிராஜ், செயலாளர் செந்தில் பிரபு, பொரு ளாளர் ராமகிருஷ்ணன், எல்பிஎப் சார்பில் தமிழ்ச்செல்வன், ராக்கி முத்து, டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தின் மதியழகன், சுதா கர், அரசுப்பணியாளர் சங்கத்தின் இன்னாசி முத்து, ஏஐடியுசி நிர்வாகி சரவணன், பாட்டாளி தொழிற்சங் கத்தின் ஜீவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.