தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை, கோவையில் உண்ணாவிரதம்

15 Jul 2026, 9:30 pm
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  மதுரை, கோவையில் உண்ணாவிரதம்

டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை, கோவையில் உண்ணாவிரதம்

மதுரை, ஜூலை 15- டாஸ்மாக் ஊழியர்களின் பணி வரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கை களை உடனடியாக நிறைவேற்ற வலி யுறுத்தி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் மதுரை, கோவை மண்டலங்கள் அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றிய டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும், பிற அரசு நிறுவன ஊழியர்களைப் போல அடிப்ப டை சம்பளம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டப் பணியை ஊழியர்களிடம் திணிக்கக் கூடாது, ஓய்வூதிய வயதை 60 ஆக நிர்ணயிக்க வேண்டும், விற்பனை அடிப்படையில் கூடுதல் பணியா ளர்களை நியமிக்க வேண்டும், இ.எஸ்.ஐ. மருத்துவத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கேஷ் கவுண்டர்–சேல்ஸ் கவுண்டர் முறை யை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், கடந்த மே 27ஆம் தேதி அமைச்சர் (விக்னேஷ்) தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியா காததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) சார்பில் கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான உண்ணாநிலைப் போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர். வேலுசாமி தலைமை வகித்தார். சம்மேளனப் பொதுச்செயலாளர் கே. திருச்செல்வம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் ஏ. ஜான் அந்தோணி ராஜ், எஸ். ராமகிருஷ்ணன் (கோவை), ஓய். அன்பு, ஆறுமுகம் (திருப்பூர்), ரவிச்சந்திரன், ஆல்துரை (நீலகிரி), மகேஷ், கிருஷ்ணமூர்த்தி (கருர்) உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

மதுரை

மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா, ஜெயம் தியேட்டர் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் பி.முருகன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின் தொடக்க உரையாற்றினார். சி.வேல்முருகன், எல்.சரவணப் பெருமாள், டி.சிவக்குமார், கே.தனுஷ் கோடி, ஜே.சீனிவாசன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் ஜே.லூர்து ரூபி, மாநிலக்குழு உறுப்பினர் இரா.தெய்வராஜ், த.கூ.ஊ. சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைச்சாமி, டிஎன்எஸ்டிசி தொழிலாளர் மாநில சம்மேளன உதவித் தலைவர் வீ.பிச்சை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மதுரை மாநகராட்சி பொறுப்பு மேயர் தி.நாகராஜன் நிறைவுரையாற்றி னார். டாஸ்மாக் மாவட்ட பொதுச்செய லாளர் ஜி.பொன்ராஜ் நன்றியுரை வழங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் தொழிற் சங்க நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.