டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாநிலைப்போராட்டம்
16 Feb 2026, 2:37 pm

டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாநிலைப்போராட்டம்

திருவண்ணாமலை, பிப். 16- டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன் முறை செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள் அன்று (பிப். 16) உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் ஊழியர் சங்கம் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு, மாநில துணைத்தலைவர் பி. சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே. நாகராஜன் போராட்டத்தை துவக்கி வைத்தார். டாஸ்மாக் ஊழியர் சங்க சம்மேளன மாநிலத் துணைத் தலை வர் டி. செல்வராசு, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் இரா.பாரி, எம். வீர பத்திரன், கே. காங்கேயன், மு பாலாஜி, ஏ. சேகர், கமலக்கண்ணன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி தனபால், ஏஐடியுசி நாராயணன், விற்பனையாளர் சங்க நிர்வாகி சேகர், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காலி பாட்டில் பெறும் திட்டத்தை அமல்படுத்தியதை திரும்ப பெற வேண்டும், ஓய்வு வயது 50 ஆக அமல்படுத்த வேண்டும், இ எஸ் ஐ மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நிர்வாகிகள் உரை யாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மா. பரிதிமால் கலைஞன் உண்ணாநிலையை முடித்து வைத்தார்.