தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தன்னிச்சையான டாஸ்மாக் ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது காலமுறை ஊதியம் வழங்க டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்!

1 hour before
தன்னிச்சையான டாஸ்மாக் ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது  காலமுறை ஊதியம் வழங்க டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்!
<p><strong>தன்னிச்சையான டாஸ்மாக் ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது காலமுறை ஊதியம் வழங்க டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தல்!</strong></p><p>சென்னை, ஜூலை 8: டாஸ்மாக் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அரசு தன்னிச்சையாக அறிவித்துள்ள தொகுப் பூதிய உயர்வு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் விரக்தியை யும் ஏற்படுத்தியுள்ளதாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்துச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் வெளி யிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர், டாஸ் மாக் கடை ஊழியர்களின் ஊதியத்தில் 25 சதவீத உயர்வு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஊழியர்களின் தற்போ தைய வாழ்க்கைச் செலவினங்களை எந்தவகையிலும் ஈடுசெய்ய உத வாது. மேலும், அமைச்சரின் இந்த அறி விப்பு ஊழியர்களின் பணி நிலமையைக் கருத்தில் கொண்டு அறிவித்ததாகத் தெரியவில்லை; மாறாகக் கூடுதல் விலைக்கு விற்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவே உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மேற்பார் வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் 23 ஆண்டு காலமாகத் தொகுப்பூதியத்திலேயே பணியாற்றி வருகின்றனர். அரசின் இதர விற்பனைப் பிரிவுகளான அமுதம் அங்காடி, நியாயவிலைக் கடை கள், ஆவின், கோஆப்டெக்ஸ் ஊழியர் களுக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியுடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், டாஸ்மாக் ஊழியர்களை மட்டும் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய தவெக அரசும் நவீன கொத்தடிமை முறையில் நடத்துவது ஏற்புடையதல்ல. எனவே, அரசு இந்தத் தன்னிச் சையான தொகுப்பூதிய உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும். உடனடி யாகத் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்ப ளத்துடன் கூடிய காலமுறை ஊதி யம் வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.