மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் வேலை செய்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கக் கோரிக்கை
22 May 2026, 12:21 am
<p><strong>மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் வேலை செய்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கக் கோரிக்கை</strong></p><p>திருப்பூர், மே 21- தமிழக அரசு உத்தரவுப்படி வழி பாட்டுத்தலங்கள் பள்ளிக்கூடங்க ளுக்கு அருகாமையில் 500 மீட்டருக்குட் பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள் ளன. அந்தக் கடைகளில் வேலை செய்த ஊழியர்களுக்கு மாற்றுத் துறையில் மாற்றுப் பணியிடம் வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர்கள் சங்கம் சிஐடியு கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர்கள் சங்க செயலாளர் மு.ஆறுமுகம் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடி தத்தில் கூறியிருப்பதாவது: கல்வி நிலை யங்கள் பேருந்து நிலையங்கள் அருகில் 500 மீட்டருக்கு உள்ளே இருக்கும் டாஸ் மாக் மதுபான கடைகளை மூடும் தமிழக அரசின் உத்தரவை, சமூகப் பொறுப் புள்ள தொழிற்சங்கம் என்ற முறையில் வரவேற்கிறோம். அதேசமயம் கடை களை மூடப்படுவதால் வேலை இழக் கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு, மாற் றுத் துறைகளில் மாற்றுப் பணி வழங்கு வதுடன் பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள டாஸ் மாக் கடைகளில் உள்ள சரக்குகளை மீண்டும் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லும் பணியை போக்குவரத்து ஒப் பந்த நிறுவனம் மேற்கொள்ள வேண் டும். மாறாக கடை பணியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து புதிய பணிச் சுமையையும் செலவையும் ஏற்படுத்தக் கூடாது. மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் இதை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கைகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாவட்ட சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டுள் ளது.</p>
