தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடர் போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வேலை

20 May 2026, 12:01 am
தொடர் போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி  டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வேலை
<p><strong>தொடர் போராட்டத்திற்கு முதற்கட்ட வெற்றி டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்று வேலை</strong></p><p>கோவை, மே 19- பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலை யில், இந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும் என்கிற டாஸ்மாக் தொழிற் சங்க தொடர் போராட்டத்தையடுத்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கோவையில் விதிகளுக்குட்பட்டு இருந்த கடைகள் உட்பட 69 கடை களை (வடக்கு பகுதியில் மட்டும் 48 கடைகள்) அதிகாரிகள் கள ஆய்வு செய்யாமல் அவசர அவசரமாக மூடி யதால், 300-க்கும் மேற்பட்ட ஊழியர் கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித் தனர். கடந்த காலங்களில் திமுக - அதி முக ஆட்சிக்காலங்களில் கடைகள் மூடப்பட்ட போது, ஊழியர்களுக்கு உடனடியாக மாற்று வேலை வழங் கப்பட்டது. ஆனால் புதிய அரசு அமைந்ததில் இருந்து மாற்றுப் பணி வழங்கப்படாததோடு, ஊழியர்கள் மீது தாக்குதல்களும் அதிகரித்து வரு கின்றன என்று டாஸ்மாக் தொழிற் சங்கத்தினர் வேதனை தெரிவித்த னர். இதையடுத்து, உடனடியாக மாற்று வேலை வழங்கி வாழ்வாதா ரத்தைக் காப்பாற்றக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த தொடர் போராட்டத்திற்கு தற்போது முதற்கட்ட வெற்றி கிடைத் துள்ளது. ஆட்சியரின் அறிவுறுத்த லின்படி, மண்டல முதுநிலை மேலா ளரை டாஸ்மாக் தொழிற்சங்க கூட் டமைப்பினர் நேரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, புதனன்று (இன்று) மண்டல முதுநிலை மேலா ளர் முன்னிலையில் பணி இழந்த ஊழி யர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் (Counselling) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாற் றுக்கடைகளில் அவர்களைப் பணி யமர்த்த உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தங்களது போராட்டத்திற்கு கிடைத்த முதற் கட்ட வெற்றியாக டாஸ்மாக் ஊழியர் கள் மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.