ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டாஸ்மாக் ஊழியர் பணிநீக்க நடவடிக்கை ரத்து கோரி ஆர்ப்பாட்டம்
23 Jun 2026, 9:51 pm
<p><strong>ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டாஸ்மாக் ஊழியர் பணிநீக்க நடவடிக்கை ரத்து கோரி ஆர்ப்பாட்டம்</strong></p><p>சிவகங்கை, ஜூன் 23- சிவகங்கை அரண் மனை வாசல் முன்பு, சிவ கங்கை மாவட்ட டாஸ்மாக் அனைத்து ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்தில், மக் கள் மன்றங்கள் மற்றும் ஊட கங்கள் வாயிலாக டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சனை கள் மற்றும் கோரிக்கை களை வெளிப்படுத்திய மாநில சம்மேளன (சிஐடியு) துணைப் பொதுச் செயலா ளர் ஜான் என்ற ராதாகிருஷ் ணன் மீது எடுக்கப்பட்ட தற் காலிக பணிநீக்க நடவ டிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஊழியர்களின் பேச்சுரிமை மற்றும் கருத் துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும், தொழிற்சங்க நிர் வாகிகள் மற்றும் தலைவர் கள் மீது பழிவாங்கும் நட வடிக்கைகளை கைவிட வேண்டும், டாஸ்மாக் ஊழி யர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. சிவகாசி சிவகாசி பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற இப் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். கோவி ந்தசாமி, நாகராஜன், சின்ன ராஜா, சந்திரசேகர், ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். துவக்கி வைத்து மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகரன் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலெட்சுமி கண்டன உரையாற்றினார். மேலும் இதில், மாநில சம்மேளன துணைத் தலை வர் சி.வேல்முருகன், மாநகர கன்வீனர் பாலசுப்பிரமணி யன், மாவட்ட பொருளாளர் பொன்னுச்சாமி, சிபிஎம் மாந கர் செயலாளர் ஆர்.சுரேஷ் குமார் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இராமநாதபுரம் இராமநாதபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு மாவட்டச் செய லாளர் கே.தனுஷ்கோடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் எம். சிவாஜி, மாவட்டச் செயலா ளர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்ட நிர்வாகிகள் எம். அய்யாதுரை, எம்.மலை ராஜன், வி.முருகன், டாஸ் மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்ராஜ், பொரு ளாளர் நம்புராஜன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.</p>
