பேட்டி கொடுத்த சிஐடியு சங்கத் தலைவரை சஸ்பெண்ட் செய்வதா? டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கண்டனம்
19 Jun 2026, 8:50 pm

பேட்டி கொடுத்த சிஐடியு சங்கத் தலைவரை சஸ்பெண்ட் செய்வதா? டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் கண்டனம்

சென்னை, ஜூன் 19 - ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த சிஐடியு டாஸ்மாக் சம்மேளனத் துணைப் பொதுச்செயலாளர் ஜான் (எ) ராதாகிருஷ்ணனை, விளக்கம் கேட்காமல் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ள நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனப் பொதுச்செயலாளர் கே. திருச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில்,

“முன்அனுமதியின்றி அவப்பெயர் ஏற்படுத்தியதாகக் கூறி எடுக்கப்பட்டுள்ள இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கை தொழிற்சங்க செயல்பாடுகளை முடக்கும் நோக்கமுடையது. தேர்தல் பிரச்சாரத்தில் டாஸ்மாக் ஊழலை விமர்சித்த தவெக, தற்போது புதிய அரசை அமைத்த பின்பு விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவது மற்றும் கருத்துரிமையை மிதிப்பது ஏற்புடையதல்ல.

இந்தத் தொழிற்சங்க விரோத நடவடிக்கையைத் திரும்பப் பெற்று தொழிலமைதியை ஏற்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.