முந்தய பக்கம்

தான்சானியாவில் சிறு விவசாயிகள் மாநாடு!

3 Nov 2026, 10:43 pm
தான்சானியாவில் சிறு விவசாயிகள் மாநாடு!

தான்சானியாவில் சிறு விவசாயிகள் மாநாடு!

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவின் மோரோகோரோ நகரில் செப்டம்பர் 29முதல் அக்டோபர் 1 வரை சிறு விவசாயிகளின் மாநாடும், அமைப்பின் 31-வது ஆண்டு பொதுப் பேரவையும் நடைபெற்றன. உணவு தன்னிறைவு, நிலப் பாதுகாப்பு, வேளாண் சூழலியல் மற்றும் சிறு விவசாயிகளுக்கான பொருளாதார நீதி போன்ற தலைப்புகளில் மாநாட்டில் விவாதங்கள் நடைபெற்றன.1993-இல் சிறு விவசாயிகளின் அமைப்பு நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு 58,916 விவசாயிகளின் பிரச்சனைகளைக் கேட்டு அறிந்தது. இவர்களில் 57% பேர் பெண்கள் ஆவர்.

ஆண்டுப் பேரவைக்கு முன் இரண்டுநாட்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 850 சிறு விவசாயிகள் பங்கேற்றனர். மாநாட்டில் தான்சானியாவின் கால்நடை மற்றும் மீன்வள அமைச்சர் தொடக்க உரையாற்றினார். உரையாற்றுவதற்குப் பதிலாக, விவசாயிகளின் குறைகளைக் கேட்பதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். விவசாயிகளுக்கும் கால்நடை மேய்ப்பாளர்களுக்கும் இடையே செப்டம்பரில் நடைபெற்ற மோதல்களில் மட்டும் 15 பேர் இறந்தனர். விவசாய அமைப்பு, நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காண அரசுக்கு உதவிடுமாறு கேட்டுக்கொண்டது.

கியூபா மற்றும் பாலஸ்தீனத்திற்கான தூதுவர்கள், கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்க சிறு விவசாயிகள் அமைப்பு, தான்சானியா சோசலிசஅமைப்பு, ஆப்பிரிக்க மக்களின் ஒற்றுமை அமைப்பின் பிரதிநிதிகள் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். பாலஸ்தீனம் மற்றும் கியூபாவிற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் அறிக்கையை மாநாடு வெளியிட்டது.

Share
FacebookXWhatsAppTelegram