முந்தய பக்கம்

தான்சானியா சர்ச்சைக்குரிய தேர்தலும், அடக்குமுறையும்

16 Nov 2025, 3:30 pm
தான்சானியா சர்ச்சைக்குரிய தேர்தலும்,  அடக்குமுறையும்
<p><strong>தான்சானியா சர்ச்சைக்குரிய தேர்தலும்,&nbsp; அடக்குமுறையும்</strong></p> <p>&nbsp;ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 2025 அக்டோபர் 29-ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஏற்கனவே பதவியிலிருந்த சாமியா சுலுஹு ஹாசன் 97.66% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இத்தேர்தல் மோசடிகள் நிறைந்ததாகக் கருதப்படுவதால், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத ஆழமான அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தேர்தலுக்கு முன்பே எதிர்க்கட்சிகள் துன்புறுத்தப் பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் துண்டு லீசு தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அரசு இணையதள முடக்கம், தடை உத்த ரவு மற்றும் பாதுகாப்புப் படைகளின் வன்முறை மூலம் பெருமளவு அடக்குமுறையைக் கையாண்டது. ஆயிரக் கணக்கானோர் கொலை செய்யப்பட்டதாகவோ அல்லது காணவில்லை என்றோ எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆரம்பத்தில் வாழ்த்திய ஆப்பிரிக்க யூனியன், பின்னர் இத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என ஒப்புக்கொண்டது. மனிதர்கள் மற்றும் மக்கள் உரிமைகளுக்கான ஆப்பிரிக்க சாசனம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆப்பிரிக்க கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram