பெட்ரோல் கிடங்கில் அடிப்படை வசதிகள் கேட்டு, டேங்கர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
19 Feb 2026, 3:09 pm
<p><strong>பெட்ரோல் கிடங்கில் அடிப்படை வசதிகள் கேட்டு, டேங்கர் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, பிப்.19- சிவாடி (எச்.பி.சி.எல்) பெட்ரோல் கிடங்கில் அடிப் படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல் லம்பள்ளியை அடுத்த சிவாடி கிராமத்தில் (எச்.பி.சி.எல்) பெட்ரோல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சங்கம் (சிஐடியு) சார்பில், டேங்கர் லாரிகளை நிறுத்தி, ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் தலை வர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் நாக ராஜன், சங்கத்தின் கௌரவத் தலைவர் முரளி, பொதுச்செயலாளர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, எச்.பி.சி.எல் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளில் இரவு-பகலாக பணியாற்றும் ஓட்டுநர்கள் மற் றும் உதவியாளர்கள் நலன்கருதி, பெட்ரோல் சேமிப்பு கிடங்கில், பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்க வேண்டும். சுகாதாரமான கழிப் பறை கட்டிடங்கள் அமைத்து கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு பொருள் வைக்கும் பெட்டக அறை இருக்க வேண்டும். மலிவு விலை கேண்டீன் உணவ கம் அமைக்க வேண்டும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும். வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பணி நேரம் நிர் ணயிக்க வேண்டும். தொழிற்சங்கத்தில் சேர்ந்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட டேங்கர் லாரி ஓட்டுநர், உதவியாளருக்கு மீண் டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், தங்களது கோரிக் கையினை நிறைவேற்றும் வரை, டேங்கர் லாரிகளை நிறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p> </p>
