நவ.8 வரை பழைய தங்கத்திற்கு கூடுதல் மதிப்பு; தனிஷ்க் நிறுவனம் சிறப்புச் சலுகை அறிவிப்பு
3 Nov 2026, 10:11 pm

நவ.8 வரை பழைய தங்கத்திற்கு கூடுதல் மதிப்பு; தனிஷ்க் நிறுவனம் சிறப்புச் சலுகை அறிவிப்பு

கரூர், நவ.3 -டாடா குழுமத்தைச் சேர்ந்த பிரபல நகை நிறுவனமான தனிஷ்க், பழைய தங்கத்தைப் புதிய நகைகளாக மாற்றுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக மக்களுக்காகச் சிறப்புத் தங்கப் பரிமாற்றச் சலுகையை அறிவித்துள்ளது.தனிஷ்க் தமிழ்நாடு வட்டார வணிக மேலாளர் டி. சந்திரசேகர், தமிழ்நாடு பகுதி வணிக மேலாளர் நவீன்குமார், வணிகக் கூட்டாளர் பிரதிநிதி சுஜான் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இந்தியக் குடும்பங்களிடம் சுமார் 25,000 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளில்பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய தங்கத்தைப் பொருளாதாரப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதுடன், தங்க இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து நாட்டின் தற்சார்பை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதன்படி, பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்யும்போது அதன் மதிப்பில் கூடுதலாக ஒரு காரட் மதிப்பு வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. உதாரணமாக, 20 காரட் தூய்மையுள்ள பழைய தங்கத்திற்கு 21 காரட் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். இந்தச் சலுகை தனிஷ்க் நிறுவனத்தில் மட்டுமின்றி, பிற நகைக்

கடைகளில் வாங்கப்பட்ட பழைய தங்கத்திற்கும் பொருந்தும். தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் வாங்கும்போது இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் சலுகை நவம்பர் 8 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

பழைய தங்கத்தைப் பரிமாற்றம் செய்யும் போது, அதன் எடை மற்றும் தூய்மை பரிசோதனை வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. தங்கத்தின் தூய்மையைக் கண்டறியும் கருவி மூலம் பரிசோ

தனை செய்வதுடன், உருக்கும் நடைமுறையும் வாடிக்கையாளர்களின் முன்னிலையில் நடக்கிறது. மேலும், 9 காரட் முதல் பல்வேறு தூய்மை கொண்ட தங்க நகைகள், உடைந்த நகைகள் மற்றும் ரசீது இல்லாத பழைய நகைகளையும் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழைய தங்கத்திற்கு உரிய மதிப்பைப் பெற விரும்புவோர், திருமண நகைகள் வாங்கத் திட்டமிடும் குடும்பங்கள் மற்றும் புதிய வடிவமைப்புகளில் நகைகளை வாங்க விரும்புவோர் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.