தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கருத்துச் சுதந்திரம், பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்க தவெக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தல்!

8 Jul 2026, 9:11 pm
கருத்துச் சுதந்திரம், பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்க தவெக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தல்!

கருத்துச் சுதந்திரம், பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்க தவெக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தல்!

ஈரோடு, ஜூலை 8 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் ஈரோடு மாநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருத்துச் சுதந்திரம், கலை-பண்பாட்டு உரிமைகள், சமூகநீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆவணப்படத் தடைக்குக் கண்டனம்; கலை இலக்கிய இரவுகளுக்கு விலக்கு கோரிக்கை

திருப்பரங்குன்றத்தின் வரலாற்று உண்மை மற்றும் மத நல்லிணக்கத்தை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்ட “திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்” ஆவணப்படத் திரையிடலைச் சங்பரிவார அமைப்புகளின் எதிர்ப்புக்குப் பணிந்து காவல்துறை தடை செய்திருப்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என தமுஎகச சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ்நாடு அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு, எவ்வித இடையூறுமின்றி ஆவணப்படம் திரையிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகத்தின் பாரம்பரியமிக்க இரவு நேரக் கலை-பண்பாட்டு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 மணி என்ற நேரக்கட்டுப்பாட்டைத் தளர்த்த வேண்டும் என்று தமுஎகச கோரியுள்ளது. கார்ப்பரேட் சாமியார் களின் விடிய விடிய நடக்கும் நிகழ்வுகளுக்கு எவ்விதத் தடையும் இல்லாத சூழலில், தமுஎகச-வின் ‘கலை இலக்கிய இரவு’ போன்ற முற்போக்கு சிந்தனை நிகழ்வுகளுக்குக் காவல்துறை கறாரான கட்டுப்பாடுகளை விதிப்பது அநீதியானது என்றும், கடந்த காலங்களைப் போல விடிய விடிய இந் நிகழ்வுகளை நடத்தத் தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமூகநீதி, கல்வி மற்றும் மொழி உரிமைகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம்: முந்தைய திமுக அரசால் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின் கீழ் செயல்படும் அர்ச்சகர் பயிற்சி மையங்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்த வேண்டும். நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடித்து, தமிழகக் கோவில்களின் வழிபாடுகள் தமிழில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். செம்மொழி இலக்கிய விருதுகள்: இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்தும் வகையில் முந்தைய அரசு அறிவித்த பன்மொழிச் செம்மொழி இலக்கிய விருதுகள் திட்டத்தை நடப்பு தவெக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

கல்விக் கொள்கை மற்றும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு: புதிய பாடத்திட்டங்களை வர லாற்று நோக்கிலும் அறிவியல் அடிப்படையிலும் உருவாக்க வேண்டும்; ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையைத் திணிக்கும் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

மேலும், தமிழக நெடுஞ்சாலை மைல் கற்கள் மற்றும் ஊர்ப்பெயர் பலகைகளில் ஒ

ன்றிய அரசு இந்தி எழுத்துகளைத் திணிப்பதைக் கைவிட வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அனைத்து மாவட்ட புத்தகக் கண்காட்சிகளுக்கும் வரவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கலைத் துறை மேம்பாடு அதானி புனல்மின் திட்டத்தை ரத்து செய்க: வேலூர் மாவட்டம் அல்லேரி மலையில், ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளின் சுற்றுச்சூழல் வழித்தடத்தைப் பாதிக்கும் அதானி நிறுவனத்தின் புனல்மின் திட்ட அனுமதியைத் தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

கண்காட்சி அரங்குகள் & திரைப்பட விருதுகள்: கவின் கலைக் கல்லூரி மாணவர் களின் படைப்புகளைக் காட்சிப்படுத்த மாவட்ட வாரி யாகப் பொது இடங்களில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட வேண்டும்.

மேலும், முந்தைய அரசின் விருது வழங்கும் குளறுபடிகளைத் தவிர்த்து, 2023 முதல் 2025 வரை வெளிவந்த படங்களுக்கான திரைப்பட விருதுகளை 2026-ஆம் ஆண்டிற்குள்ளேயே இந்த அரசு உடனே வழங்கிட வேண்டும். படைப்புகள் நாட்டுடைமை: மறைந்த புகழ்பெற்ற முற்போக்கு எழுத்தாளர்கள் சோலை சுந்தரபெருமாள் மற்றும் ப. ஜீவகாருண்யன் ஆகியோரின் இலக்கியப் படைப்புகளைத் தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்க வேண்டும் என்றும் தமுஎகச மாநிலக்குழு வலியுறுத்தி யுள்ளது. த

மிழகம் தழுவிய மாநில அளவிலான நிகழ்ச்சிகள் அறிவிப்பு மாநிலக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வரும் மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பின்வரும் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன: சாதி ஆணவக் கொலைக்கு எதிரான மாநாடு: திருநெல்வேலி மாவட்டம் (காதலைக் கொண்டாடும் சிறப்பு மாநாடு). மத நல்லிணக்க நிகழ்வு: மதுரை மாநகர் & புறநகர் (திருப்பரங்குன்றம் குறித்த சிறப்பு நிகழ்வு).

நூற்றாண்டு விழாக்கள்: வேலூர் மாவட்டத்தில் ‘மகத் போராட்ட நூற்றாண்டு விழா’, தஞ்சாவூரில் ‘எழுத்தாளர் கே. டானியல் நூற்றாண்டு விழா’, சிவகங்கையில் ‘கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா’. பாராட்டு விழாக்கள் மற்றும் திரைப்பட விழா: மத்திய மற்றும் வடசென்னையில் எழுத்தாளர்கள் உதயசங்கர், ச. தமிழ்ச்செல்வன் பாராட்டு விழாக்கள், 2025 திரைப்பட பரிசளிப்பு விழா. கிருஷ்ணகிரியில் சர்வதேச திரைப்பட விழா 2026, புதுச்சேரியில் சர்வதேச குறும்பட ஆவணப்பட விழா. நினைவு மற்றும் சிறப்புத் தினங்கள்: நாமக்கல்லில் ‘பிடல் காஸ்ட்ரோ 100 / தென்னமெரிக்கக் கலை இலக்கியம்’, தென்சென்னையில் ‘தமிழறிஞர் கமில் சுவெலபில் 100’, கோவையில் ‘எழுத்தாளர் சிற்பி 90’ ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.