தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமுஎகச மாநிலக் கலை இலக்கிய விருதுகள் பேரா. ந.முத்துமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது புதுக்கோட்டையில் விழா; பல்துறைப் படைப்பாளிகள் கவுரவிப்பு

30 Oct 2026, 11:36 pm
தமுஎகச மாநிலக் கலை இலக்கிய விருதுகள் பேரா. ந.முத்துமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது  புதுக்கோட்டையில் விழா; பல்துறைப் படைப்பாளிகள் கவுரவிப்பு

தமுஎகச மாநிலக் கலை இலக்கிய விருதுகள் பேரா. ந.முத்துமோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது புதுக்கோட்டையில் விழா; பல்துறைப் படைப்பாளிகள் கவுரவிப்பு

புதுக்கோட்டை, அக்.30-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலை இலக்கிய விருதுகள் 2025வழங்கும் விழா சனிக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் நா.முத்துநிலவன் தலைமை வகிக்க, மாநிலப் பொதுச் செயலர் எழுத்தாளர் களப்பிரன்,மாநிலப் பொருளாளர் சைதை ஜெ, மாநிலத் துணைத் தலைவர்கள் ஆதவன் தீட்சண்யா, க.உதயசங்கர்,புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விருதாளர்கள்குறித்த பாராட்டுரை வாசிக்கப்பட்டு, அவர்களின் ஏற்புரையும் தனித்தனி அமர்வுகளாக நடந்தன. கலை இலக்கியப் பேரணியைச் சின்னப்பா பூங்காவிலிருந்து தொழிலதிபர் அருண் சின்னப்பா தொடங்கி வைக்க, கவிதை,ஓவியக் கண்காட்சியைத் தொழிலதிபர் இளையராஜா திறந்துவைத்தார். மாவட்டத் தலைவர் ராசி பன்னீர்செல்வன் வரவேற்க, மாவட்டப்பொருளாளர் மு.கீதா நன்றி கூறினார்; மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் லெட்சுமிகாந்தன், வெண்புறா, மாவட்டச் செயலர்கள் ஆலங்குடி வெள்ளைச்சாமி, எல்.வடிவேல் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

விருதுகள் விவரம்

வாழ்நாள் சாதனையாளர் விருது (கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை) — பேரா. ந.முத்துமோகன்; மேலாண்மை பொன்னுசாமி நினைவு ‘பெண் படைப்பாளுமை’ விருது — பேரா. சோ.மோகனா; மக்கள் பாடகர் திருவுடையான் நினைவு ‘இசைச்சுடர்’ விருது — புதுச்சேரி உமா; மு.சி.கருப்பையா பாரதி ஆனந்த சரஸ்வதி நினைவு‘நாட்டுப்புறக் கலைச்சுடர்’ விருது — முரசு ஆனந்த்; த.பரசுராமன் நினைவு ‘நாடகச்சுடர்’ விருது — பேரா. வேலுசரவணன்; கருப்பு கருணா நினைவு ‘நுண்கலைச் சுடர்’ விருது — டிராட்ஸ்கி மருது.கே.முத்தையா நினைவு ‘தொன்மைசார் நூல்’ விருது — ‘நீலமலைத் தொல்லியல்’ எழுதிய சுதாகர் நல்லியப்பன்,குமரவேல் ராமசாமி; கே.பி.பாலச்சந்தர் நினைவு ‘நாவல்’ விருது — ‘மையிருளி’ எழுதிய கி.அமுதா செல்வி;சு.சமுத்திரம் நினைவு ‘விளிம்புநிலை மக்கள் படைப்பு’ விருது — ‘இருளி’ எழுதிய சாரோன்; இரா.நாகசுந்தரம் நினைவு ‘அல்புனைவு’விருது — ‘மனங்களின் நடுவே’ எழுதிய எஸ்.அகிலாண்டபாரதி; வெம்பாக்கம் ஏ.பச்சையப்பன்–செல்லம்மாள்நினைவு ‘கவிதை நூல்’ விருது — ‘மாயக்கிளி’ எழுதிய சசி இனியன்; அகிலா சேதுராமன் நினைவு ‘சிறுகதை நூல்’விருது — ‘கருப்பு வானம்’ எழுதிய ஜெயராணி.

வ.சு.ப.மாணிக்கனார் நினைவு ‘மொழிபெயர்ப்பு நூல்’ விருது — ‘ஆட்சியிலும் அதிகாரத்திலும் இடமில்லை’ எழுதிய அப்துல் ரஹ்மான்; ராஜாபாளையம் மணிமேகலை மன்றம் கொ.மா.கோதண்டம் நினைவு ‘குழந்தைகள் இலக்கியம்’ விருது — ‘நீயாஇருந்தா என்ன பண்ணுவ’ எழுதிய மதி கண்ணன்; கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை ‘மொழி வளர்ச்சி நூல்’ விருது— ‘தமிழ் மீதான ஆதிக்கம்’ எழுதிய இலா.வின்சென்ட்; ஜனநேசன் நினைவு ‘எழுத்தாளர் முதல் நூல்’ விருது —‘மனிதரைப் படிப்போம்’ எழுதிய தீபிகா தீனதயாளன் மேகலா; மருத்துவர் சிவக்கண்ணு நினைவு ‘அறிவியல்மனப்பாங்கு நூல்’ விருது — ‘நுண்ணியிருலகு’ எழுதிய அ.லோகமாதேவி.மா.ராமச்சந்திரன் நினைவு ‘குறும்பட’ விருது — ‘இரை’ குறும்பட இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி;பா.ராமச்சந்திரன் நினைவு ‘குறும்பட’ விருது — ‘பூதகாதை’ இயக்குநர் அன்பு சாக்கியன்; எஸ்.பி.நல்லசிவன்–ரத்தினம் நினைவு ‘ஆவணப்பட’ விருது — ‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ இயக்குநர்கள் தவம்–தமிழ்தாசன். வாழ்நாள் சாதனையாளர் விருது ரூ.ஒரு லட்சம் ரொக்கமும், மற்ற விருதுகள் தலா ரூ.10ஆயிரம் ரொக்கமும் கொண்டவை.

முத்துமோகன் குறித்து ஆதவன் தீட்சண்யா

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் பேரா. ந.முத்துமோகன் குறித்து எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாபேசுகையில், தமிழ்ச் சமூகத்தில் நிலவும் மொழி, மத, சாதியப் பிரச்னைகளுக்குத் தீர்வாக மார்க்சிய,அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்கள் இணைந்து செயல்பட வேண்டிய தேவையை விளக்கியவர் முத்துமோகன்என்றார். “அடையாள அரசியல் என்ற பெயரால் யாரையும் நிராகரிக்காமல், அவற்றில் உள்ள முற்போக்கு,ஜனநாயக அம்சங்களை நிதானத்துடன் கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டவர் அவர். வேதியியல்படித்தபின் தத்துவத் துறையில் தன்னை ஒப்புக்கொடுத்த முத்துமோகன், தனது படிப்பையோ அறிவையோஊதியத்தையோ எப்போதும் வெளிக்காட்டாமல் இயல்பான எளிமையுடன் பழகியவர்” என்றார். (ந.நி.)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.