தமுஎகச இலக்கியச் சந்திப்பு
8 Jun 2026, 10:56 pm
<p><strong>தமுஎகச இலக்கியச் சந்திப்பு</strong></p><p>கோவை, ஜூன் 8- கோவை தமுஎகச இலக்கியச் சந்திப்பில், மூன்று நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தாமஸ் கிளப் பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 272 ஆவது இலக்கியச் சந்திப்பு ஞாயிறன்று நடைபெற் றது. இதில், கவிஞர் ரகுமான் எழுதிய “நிரம்மா மொழி” என்ற கவிதைத் தொகுப்பை கவிஞர் இல.கோபால் அறிமுகப் படுத்த, கவிஞர் கா.ப.ரகுமான் ஏற்புரையாற்றினார். கவிஞர் நிஷா மன்சூரின் “நூருன் அலா நூர்” என்ற கவிதைத் தொகுப்பை முனைவர் பி.சின்னசாமி அறிமுகப்படுத்த, கவி ஞர் நிஷா மன்சூர் ஏற்புரையாற்றினார். தொடர்ந்து கவிஞர் கீர்த்தியின் “அவளெனும் அடர் வனம்” என்ற கவிதைத் தொகுப்பை முனைவர் மு.அன்பரசி அறிமுகப்படுத்த, கவிஞர் இரா.கீர்த்தி ஏற்புரையாற்றினார். கவிஞர் வி.விஷ்ணு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில், தமுஎகச மாவட்டச் செயலாளர் அ.கரீம், இலக்கிய சந்திப்பு ஒருங்கிணைப்பாளர் தங்க முருகேசன், சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோ இளங்கோ, ஜின்னா, கலை வாணி எழுத்தாளர் ஜெ.ல.ஜெயராம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முடிவில், எல்.சி.பாண்டி நன்றி கூறினார்.</p>
