முந்தய பக்கம்

தமுஎகச அமைப்பு தினக் கூட்டம்

19 Jul 2026, 10:24 pm
தமுஎகச அமைப்பு தினக் கூட்டம்
<p><strong>தமுஎகச அமைப்பு தினக் கூட்டம்</strong></p><p>புதுக்கோட்டை, ஜூலை 19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மரபு கலை கிளையின் சார்பில், தமுஎகச அமைப்பு தினக் கூட்டம் புதுக்கோட்டையை அடுத்த காயாம்பாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் ப. மனிஷா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கவிஞர் நா. முத்துநிலவன் தமுஎகச அமைப்பு தினம் குறித்து உரையாற்றினார். புதுக்கோட்டை மாநகர கிளைச் செயலாளர் கஸ்தூரிரெங்கன், மரபு கலை கிளைத் தலைவர் எஸ்.பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். நிகழ்வில், பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. கிளைச் செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram