அழகிய மண்டபத்தில் தமுஎகச பயிற்சிப்பட்டறை
16 Mar 2026, 4:46 pm
<p><strong>அழகிய மண்டபத்தில் தமுஎகச பயிற்சிப்பட்டறை</strong></p>
<p>தக்கலை, மார்ச் 16- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், குமரிமாவட்ட குழு வின் சார்பில் மாவட்டகுழு உறுப்பினர்கள், மற்றும் முன்னணி ஊழியர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை மார்ச் 15 ஞாயிறன்று அழகியமண்டபத்தில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் கவிஞர் தக்கலை ஹலீமா தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர்கள் கே. வேலாயுதம் மற்றும் லட்சுமி காந்தன் கலந்துகொண்டு “கலை, இலக்கியம், பண்பாடு, இயக்கம்” என்னும் தலைப்பில் பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாக தமிழ கத்திலும் இரண்டாம் உலகப்போர் காலம்தொட்டு, கலை இலக்கிய பண்பாட்டு வெளியில் நிலவிய, இப்போதும் நிலவுகின்ற நிகழ்ச்சிப்போக்குகளை விவ ரித்தனர். கலை இலக்கிய படைப்பாளர்கள் அமைப்பாக ஏன் திரள வேண்டும், அமைப்பில் எப்படி இயங்கவேண்டும் எனவும் உரையாற்றினர். கவிதைகள், பாடல்கள் கேள்விகள், விவாதங்கள், உரையாடல்கள் நடை பெற்றன. மாவட்ட செயலாளர் அருள் மனோ நன்றி தெரிவித்தார். பயிற்சி பட்டறையின் துவக்க நிகழ்வாக அண்மையில் மறைந்த இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கெ என் பணிக்கருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. </p>
