பரமக்குடியில் தமுஎகச கருத்தரங்கம்
14 Feb 2026, 4:33 pm
<p><strong>பரமக்குடியில் தமுஎகச கருத்தரங்கம்</strong></p>
<p>பரமக்குடி, பிப்.14- இராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் மற்றும் முத்தாலம்மன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய மகா த்மா காந்தி தின கருத்தரங் கம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. கல்லூரி முதல்வர் எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக அலுவலர் வி.காயத்ரிதேவி வரவேற்புரையாற்றினார். தமுஎகச மாவட்ட துணைச் செயலாளர் க.ராமர் துவக்க உரையாற்றினார். மாவட்ட துணைத் தலை வர் எஸ்.சந்திரசேகரன் “மக்க ளும் அரசியலமைப்புச் சட்ட மும்” என்ற தலைப்பிலும், மாவட்ட துணைத் தலைவர் மங்களக்குடி நா.கலையர சன் “மகாத்மாவும் மத நல்லிணக்கமும்” என்ற தலைப்பிலும் கருத்துரை யாற்றினர். மாவட்ட பொருளாளர் ந. ரேணுகாதேவி நன்றி கூறி னார்.</p>
