முந்தய பக்கம்

மன்னார்குடியில் தமுஎகச கருத்தரங்கம்

8 Feb 2026, 3:55 pm
மன்னார்குடியில் தமுஎகச கருத்தரங்கம்
<p><strong>மன்னார்குடியில் தமுஎகச கருத்தரங்கம்</strong></p> <p>மன்னார்குடி, பிப்.8 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிளை சார்பாக, மகாத்மா காந்தி நினைவுநாள் மற்றும் மேனாள் தமுஎகச மாவட்டத் தலைவர் தோழர் &nbsp; இரா. தாமோதரன் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மன்னார்குடி வெஸ்டன் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கிற்கு கிளைத் தலைவர் வீ. &nbsp;கோவிந்தராஜ் தலைமை &nbsp;வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.சௌந்தர ராஜன், மாவட்ட துணைத் தலைவர் கவிஞர் சரஸ்வதி, தாயுமானவன் முன்னிலை வகித்த னர். மாவட்டக் குழு உறுப்பினர் கே. &nbsp;பிச்சைக்கண்ணு வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் யு.எஸ்.பொன்முடி உரை யாற்றினார். &nbsp;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சி.பிரகாஷ், கலைபாரதிக்கும், ஓய்வூதியர் சங்க தலைவர் காளிமுத்து மு. &nbsp;சிவகுருநாதனுக்கும் &nbsp; சால்வை அணி வித்து கவுரவித்தனர். எழுத்தாளர்கள் மு.சிவ குருநாதன், &lsquo;அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்&rsquo; என்ற தலைப்பிலும் கலை பாரதி &lsquo;மதநல்லிணக்கம் பேணுவோம் மனிதம் போற்றுவோம்&rsquo; என்ற தலைப்பிலும் உரையாற்றினர். &nbsp;கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு அறிவியல் இயக்கத்தின் மதுரை மாவட்ட வெளியீடான &ldquo;கீழடி மனிதன் முதல் தகவல் &nbsp;அறிக்கை&rdquo; என்ற புத்தகம் வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் கே.அகோரம் தலை மையில் அரசியல் சாசன பாதுகாப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. துணைத் தலைவர் கே.வி.பாஸ்கரன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram