திருநர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுக சென்னையில் தமுஎகச கருத்தரங்கம்
24 Mar 2026, 3:23 pm
<p><strong>திருநர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறுக சென்னையில் தமுஎகச கருத்தரங்கம்</strong></p>
<p>சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு சார்பில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026-ஐ திரும்பப் பெற வலி யுறுத்தி கருத்தரங்கம் ஓட்டேரியில் திங்க ளன்று (மார்ச் 24) நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் ஆதவன் தீட்சண்யா தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட செயலாளர் விஜயன் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் பா.ஹேமாவதி நோக்கவுரையாற்றினார். பொதுச்செயலாளர் களப்பிரன், மாநிலக் குழு உறுப்பினர் கவிஞர் கோ.லக்ஷ்யா மன்னார், எழுத்தாளர் மயிலை பாலு, தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத் தலைவர் எம்.ராமகிருஷ்ணன், கலைமாமணி சுதா, ஸ்ரீஜித் சுந்தரம் (கட்டியக் காரி), சபிதா, அக்னி, விஸ்வராணி, ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். எழுத்தாளர் கரன் கார்க்கி நன்றி கூறினார்.</p>
