தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குரலற்றவர்களின் குரலாக தமுஎகச அலுவலகம் செயல்படும்!'

15 Jun 2026, 12:24 am
குரலற்றவர்களின் குரலாக தமுஎகச அலுவலகம் செயல்படும்!'

குரலற்றவர்களின் குரலாக தமுஎகச அலுவலகம் செயல்படும்!'

கோவை, ஜூன் 14- எளிய ஒடுக்கப்பட்ட குரலற்ற மக்களின் குரலாக தமுஎகச அலுவ லகம் செயல்படும் என தமுஎகச கோவை மாவட்டக்குழுவின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

கோவை உப்பிலிபாளையத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டக்குழு புதிய அலுவலகம் சனியன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை திறந்து வைத்து தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், கோவை மாவட்டம், தமிழ்நாட்டிற்கு பல முன்னுதாரணமாக பல விஷ யங்களை துவக்கி வைத்திருக்கிறது.

கோவை மாவட்டக் குழுவிற்கான புதிய அலுவலகம் திறப்பு என்கிற செய்தி பல மாவட்ட தமுஎகச தோழர் களுக்கு உந்துதலாக உற்சாகத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்க ளுக்கு உண்டு. கோவையில் எழுத்தா ளர்கள், கலைஞர்கள் கொண்ட பெரும் இலக்கியப்படையை உரு வாக்க வேண்டும் என தமுஎகச கூட் டத்தில் முடிவு செய்துள்ளோம். இதற்கு இந்த புதிய அலுவலகம் பிர தான பங்களிப்பு செலுத்தும்.

அதே போல் தமுஎகச-வின் அனைத்து பொறுப்புகளிலும் 50 சதவீதத்திற் கும் மேல் பெண்களை பங்கேற்க செய்ய வேண்டும் எனவும் தீர்மானித் துள்ளோம். இந்த இடம் ஒரு சந்து பகுதியில் அமைந்துள்ளது. இயக்குநர் பாரதி ராஜா இறந்த போது ஒரு ஜோதி டர் கூறியிருக்கிறார், பாரதிராஜா அவர்களின் வீடு குத்தல்ல மாட்டி யிருக்கு அதுதான் அவர் மரணத் திற்கு காரணம் என்று கூறியிருக்கி றார். நமக்கு நம்பிக்கை இல்லை. இந்த இடமும் குத்தல்ல இருக்கிறது.

நிச்சயமாக சமூகத்திற்கு தீங்கு களை குத்துகின்ற இடமாக தமுஎகச வின் இந்த அலுவலகம் இருக்கும். இந்த இடம் எளிய மக்களின் குர லற்றவர்களின் குரலாக செயல்படுவ தற்கும் கலை இலக்கியத்தில் ஆர் வம் கொண்டு கதை எழுதவும், ஓவி யம் வரையவும் இசைக்கவும், பாட வும் வாய்ப்பு தருகிற இடமாக இந்த இடம் இருக்கும், என்றார்.

மேலும் அவர் பேசுகையில், கியூ பாவில் புரட்சி நடத்தி ஆட்சியை கைபற்றிய பின்னர் அமெரிக்காவில் நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பிடல் காஸ்ட்ரோ வுக்கு அமெரிக்காவில் தங்குவதற்கு எந்த விடுதியிலும் இடம் தரவில்லை. பின்னர் அவர், கருப்பர் இனமக்கள் வாழும் பகுதியில் ஒரு கருப்பினத்த வர் வீட்டில் தங்கினார். அப்போது அமெரிக்காவிற்கு பயந்து அவரைப் பார்க்க எந்த நாட்டு தலைவர்களும் வரவில்லை.

அப்போது காஸ்ட் ரோவை சந்தித்த ஒரே தலைவர் அப் போதைய இந்திய பிரதமர் நேரு மட்டுமே. ஏனென்றால், இந்தியாவின் அயல் நாட்டு கொள்கை யார் பக்கம் இந்தியா நிற்க வேண்டும் என்கிற பார்வை அவருக்கு இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்க ளுக்கு அந்த கொள்கை எல்லாம் கிடையாது. இனவெறி மதவெறி கொண்ட பல நாடுகளிடம் நட்பு கொள் கிறார்கள் என விமர்சித்தார்.

ஆதவன் தீட்சண்யா உரை புதிய அலுவலகத்தின் நூல கத்தை திறந்து வைத்து மாநில துணைத்தலைவர் ஆதவன் தீட் சண்யா பேசுகையில், 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவை மாவட்டத்தின் கலை இலக்கிய பண் பாட்டு செயல்பாடுகளுக்கான தலை மையகமாக இந்த இடம் அமையும். மனித காலடி படாத மனிதர்களின் பேச்சு மொழி கேட்காத மனிதர்க ளால் தொட்டு தடவப்படாத எந்த ஒரு கட்டிடமாக இருந்தாலும் அது ஒரு குட்டி சுவராகத்தான் பார்க்க முடி யும்.

அதை ஒரு மனிதன் நடமாட்டம் உள்ள தமிழ் சமூகத்தின் மனசாட்சி யாய் விளங்கக்கூடிய கலைஞர்க ளும் எழுத்தாளர்களும் வந்து புலங்கி செல்லக்கூடிய ஒரு இடமாக அது மாற வேண்டும் என்கிற கனவை எங்க ளுக்கும் முன்பாக கோவை மாவட் டக்குழு தோழர்கள் கண்டிருக்கிறார் கள் என்பது உண்மையிலேயே மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

இந்த இடம் கலை இலக்கிய நட வடிக்கைகளின் தலைமையகமாக வெகு விரைவில் தன்னை வளர்த்துக் கொள்ளும் என்று நான் நினைக்கின் றேன்.

இப்பகுதி தோழர்கள் வீடு வீடாகச் சென்று கலை இலக்கியத் தில் ஆர்வம் கொண்டவர்களை உறுப் பினர்களாக்கும் பணியை செய்ய வேண்டும் கடந்த மாநில மாநாட்டில் வீடு தோறும் உறுப்பினர் வீதி தோறும் கிளை என்ற தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் இடமாக இந்த கட்டிடம் அமைய வேண்டும், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.