தமுஎகச இலக்கிய சந்திப்பு
4 Jan 2026, 5:55 pm
<p><strong>தமுஎகச இலக்கிய சந்திப்பு</strong></p>
<p>கோவை, ஜன.4- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின், 267 ஆவது இலக்கிய சந்திப்பு கோவை மாவட்டக் குழு சார்பில் ஞாயிறன்று நடைபெற்றது. தமுஎகச சார்பில் நடைபெற்ற இலக்கிய சந்திப்பு கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. கவிஞர் சி.சூரியபிரகாஷ் தலைமை தாங்க கவிஞர் அ.ஹாஜிரா வரவேற்றார். இதில் கவிஞர் தெய்வீகன் எழுதிய “பெயரிடப்படாத பறவை” கவிதைத்தொகுப்பை, கவிஞர் வெள்ளலூர் ஆனந்தி அறிமுகம் செய்தார். கவிஞர் தெய்வீகன் ஏற்புரையாற்றினார். இதனைதொடர்ந்து, எழுத் தாளர் அங்குலட்சுமியின் “பொட்டு என்கிற லட்சுமி” சிறுகதைத்தொகுப்பை. கவிஞர் க.கஸ்தூரி அறிமுகம் செய் தார். எழுத்தாளர் ஈ.அங்குலட்சுமி ஏற்புரையாற்றினார். இந்நிகழ்வில் பொங்கல் சிறப்புக் கவியரங்கம் மற்றும் படைப்பாளர்களுக்கு சிறப்பு செய்தல் உள்ளிட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில், மாவட்டப் பொருளாளர் முனைவர் வெ. மைதிலி, மாவட்ட துணைச் செயலாளர் ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ரா.குருவியாஸ் நன்றி கூறினார்.</p>
