திண்டுக்கல்லில் தமுஎகச நூல் அறிமுக விழா
28 Dec 2025, 5:05 pm
<p><strong>திண்டுக்கல்லில் தமுஎகச நூல் அறிமுக விழா</strong></p>
<p>திண்டுக்கல், டிச.28- திண்டுக்கல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் நூல் அறிமுக விழா நடைபெற்றது. திண் டுக்கல் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் துணைத் தலை வர் சு. வனசேகரன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் அ.வைத்திலிங்க பூபதி வரவேற்புரையாற்றினார். ஓவியர் கவியோவியத்தமிழன் எழுதிய “விதி முறைகளற்ற ஆட்டங்கள்” என்ற நூல் குறித்து மாநிலக்குழு உறுப்பினர் தமிழ் பித்தன் ஆய்வுரையாற்றினார். கவிஞர் சுசிலா மேரி எழுதிய “கூட்டாஞ்சோறு” நூலை தர்மராஜ் அறிமுகப்படுத்தி பேசி னார். சுப்பையா முருகன் எழுதிய “தீபா வளிக் கதவுகள்” என்ற நூல் குறித்து வேட சந்தூர் கிளைச் செயலாளர் பாலமுருகன் ஆய்வுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் கவி.தாமோ வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து நூலா சிரியர்கள் ஏற்புரையாற்றினர். நூலா சிரியர்களை பாராட்டி மாநில துணைத் தலைவர் ஆதவன் தீட்சண்யா சிறப்பு ரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை பேரா.வெ.முத்து லெட்சுமி ஒருங்கிணைத்தார்.</p>
