முந்தய பக்கம்

தமுஎகச - பாலர் பூங்கா சார்பில் ’கோடை விழா 2026

24 May 2026, 1:18 am
தமுஎகச - பாலர் பூங்கா சார்பில் ’கோடை விழா 2026
<p><strong>தமுஎகச - பாலர் பூங்கா சார்பில் ’கோடை விழா 2026</strong></p><p>சேலம், மே 23- சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி ஏரி பூங்காவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் பாலர் பூங்கா ஆகியவை இணைந்து நடத்திய “கோடை விழா 2026” சனியன்று உற்சாகமாக நடைபெற்றது. கோடை விழாவிற்கு, பாலர் பூங்காவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோதிலட்சுமி தலைமை தாங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் சோபனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குழந்தைகளுடன் இணைந்து பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், சுவாரசியமான கதை சொல்லும் நிகழ்வுகளிலும் ஈடுபட்டு மகிழ்வித்தார். இவ்விழாவில் குழந்தைகளின் கற்பனைத் திறனையும், தனித்திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் கதை சொல்லுதல், பாட்டுப் பாடுதல் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட மொத்தம் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் எல்.ஐ.சி (LIC) கலியபெருமாள் சார்பில் “ஓம் கிரீம் ஐஸ்கிரீம்” என்ற சிறுவர் புத்தகமும், பிரகாசம் சார்பில் பென்சில், அளவுகோல், ரப்பர், ஷார்ப்னர் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இக்கோடை விழாவில், சிபிஎம் சேலம் மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார், தமுஎகச சேலம் மாநகரக் கிளைகளின் தலைவர்கள், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் பாக்கியா மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram