தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமுஎகச சார்பில் ‘ஹபீபி’ திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு

13 Jul 2026, 10:37 pm
தமுஎகச சார்பில் ‘ஹபீபி’ திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு

தமுஎகச சார்பில் ‘ஹபீபி’ திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு

அவிநாசி, ஜூலை 13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு சார்பில், ‘ஹபீபி’ திரைப்படக் குழுவின ருக்கான பாராட்டு விழா திருமுருகன் பூண்டியில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. பாரட்டு வோர், பாரட்டைப்பெருவோர், பார்வையா ளர்கள் அனைவரும் நெகிழ்ந்து போன விழா வாக இது மாறியது.

தமுஎகச மாவட்டச் செயலாளர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்வி ழாவில், பொருளாளர் திருப்பதி வரவேற் றார். விழாவில் தமுஎகச மாநில பொதுச் செயலாளர் களப்பிரன் பேசுகையில், இந்திய சினிமாவில் சிறுபான்மையின மக்க ளின் உண்மையான வாழ்வியல் பதிவு செய்யப்படுவதில்லை. இஸ்லாமியர்க ளைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கை உடைத்து, அவர்களின் எதார்த்த வாழ்க்கை யையும் நெசவாளர் குடும்பங்களின் உழைப் பையும் இயக்குநர் மீரா கதிரவன் இதில் பதிவு செய்துள்ளார். விரைவில் ஓடிடி தளத்திற்கு வரவுள்ள இந்த முற்போக்கான படைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் களப்ப ணியாற்ற வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து, இப்படத் தின் மூலம் மீண்டும் நடிகராக அறிமுகமாகி யுள்ள பிரபல இயக்குநர் கஸ்தூரிராஜா பேசு கையில், இது ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றிய படம் அல்ல; ஒரு முஸ்லிம் குடும்பத் தின் எதார்த்தமான பாசப் போராட்டங்க ளைச் சொல்லும் கதை. மீரா கதிரவன் கதை யைச் செதுக்கியுள்ள விதம், எனது 48 வருட திரையுலக வாழ்க்கையில் ஒரு புதிய துவக் கத்தைத் தந்துள்ளது என்றார் நெகிழ்ச்சி யுடன்.

இயக்குநர் மீரா கதிரவன் ஏற்புரையாற்றி பேசுகையில், படம் எடுக்கும்போது சந்தித்த ஓட்டம், மூச்சிரைப்பு மற்றும் பல்வேறு சவால்களுக்கு இடையே. களத்தில் நின்று எளிய மனிதர்களுக்காகப் போராடும் தோழர்களின் சார்பில் நடைபெறும் இந்த பாராட்டு விழா பெரும் ஊக்கமளிக்கிறது. தமிழ் சினிமாவில் 110 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களின் வாழ்வியல் நிஜ மாகப் பேசப்படாத சூழலில், உண்மை யான பள்ளிவாசல்களுக்குள் சென்று இப்ப டம் படமாக்கப்பட்டுள்ளது. 1500 ஆண்டுக ளுக்கு முந்தைய சிந்தனைகளில் இருந்து மாறி, கணவனை இழந்த பெண்ணின் மறும ணத்தை மையமாகக் கொண்டு இதன் கிளை மாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களின் உரிமைகளைப் பேசும் இத்திரைப்படத்தை மக்கள் திரையரங்குகளில் கொண்டாடுவது மிகப்பெரிய வெற்றி என்றார். இவ்விழாவில் தமுஎகச மாநில செயற் குழு உறுப்பினர் ஈஸ்வரன், மாவட்டத் தலை வர் சம்பத், நகர மன்ற உறுப்பினர் சுப்பிரம ணியன், தேவயானி, சம்சுதீன் ஹீரா, உமர்க யான், குணசுந்தரி ஆகியோர் திரைப்படம் அனுபவம் குறித்து பேசினர். விழாவின் ஒரு பகுதியாக, அவிநாசி கிளை சார்பில் ‘பிரம்ம னின் கிறுக்கல்கள்’ என்ற குறும்படம் வெளியி டப்பட்டது. நிறைவாக, அவிநாசி கிளைச் செயலாளர் தினகரன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.