தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிமுன் அன்சாரி ஒரு உண்மையான களப்போராளி! கே.பாலகிருஷ்ணன் புகழாரம்

7 Apr 2026, 5:38 pm
தமிமுன் அன்சாரி ஒரு உண்மையான களப்போராளி! கே.பாலகிருஷ்ணன் புகழாரம்
<p><strong>தமிமுன் அன்சாரி ஒரு உண்மையான களப்போராளி! கே.பாலகிருஷ்ணன் புகழாரம்</strong></p> <p>சிதம்பரம், ஏப்.7- &nbsp;சிதம்பரம் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டி யிடும் மனிதநேய ஜன நாயக கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி ஒரு சிறந்த களப்போராளி என் றும், அவர் தேர்தலுக்காக வேடம் போடுபவர் அல்ல என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரி வித்தார். தமிமுன் அன்சாரியை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசிய தாவது: பாஜகவை வீழ்த்த அமைக்கப்பட்ட மாபெரும் கூட்டணி &ldquo;அரசிய லில் எப்போதும் நேர்மைக் &nbsp; குத்தான் வெற்றி கிடைக்கும். தமிழகத்தில் பாஜக வேரூன்றிவிடக் கூடாது என்பதற்காக திமுக தலைமையில் 21 கட்சி கள் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைத்து ள்ளன. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. அதில் ஒரு தொகுதியாகச் சிதம்பரம் இருக்க வேண்டும். மதவாத அரசியலுக்குச் சாட்டை அடி வேட்பாளர் தமிமுன் அன்சாரி மக்கள் நல னுக்காகத் தொடர்ந்து போராடி வருபவர். இந்த ஆன்மீக நகரத்தில் ஒரு இஸ்லாமியர் போட்டி யிடுகிறார் எனச் சிலர் கீழ்த்தரமான விமர்ச னங்களை முன்வைக்கின்ற னர். அவர்களுக்கு நான் நினைவூட்ட விரும்புவது ஒன்றுதான்; இதே சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கவுசியா பேகம் 5 ஆண்டுகள் நகரத் தலைவராக இருந்தார். அப்போது இந்த ஆனமீக நகரத்தின் பெருமை மங்கிவிட்டதா? அல்லது ஆலயங்களுக்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டதா? கிடையாது. மக்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தும் ஒரே இயக்கம் பாஜக மட்டும்தான். இந்தத் தேர்தல் களம் சவால்கள் நிறைந்தது, அனைவரும் ஒருங்கிணைந்து களத்தில் நின்று வெற்றிவாகை சூடு வோம் எனச் சூளுரை ஏற்போம்&rdquo;. இவ்வாறு அவர் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.