தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி அண்ணாமலையால் பாஜகவுக்கு பாதிப்பில்லை

7 Jun 2026, 11:14 pm
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி அண்ணாமலையால் பாஜகவுக்கு பாதிப்பில்லை

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி அண்ணாமலையால் பாஜகவுக்கு பாதிப்பில்லை

தமிழிசை நம்பிக்கை மதுரை, ஜூன் 7- தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் முதன்மை கடமையாக இருக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்த பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “தமிழ கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரு கின்றன. முதலில் பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும்.

அதன்பிறகே பெண்கள் முன்னேற்றத் திட்டங்கள் குறித்து பேச வேண்டும்” என்றார். பெண்களுக்கான “சிங்கப்பெண்” திட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், பெண்கள் பாதுகாப்பு சவால்கள் தொடரும் நிலையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படு வது குறித்து கேள்வி எழுப்பினார்.

அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்தில் பாஜகவினர் இணைந்து வருவதாக கூறப்படும் தக வல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, “பாஜக தொண்டர்கள் கட்சியை வளர்க்க பல ஆண்டுகளாக உழைத்தவர்கள். சிலர் வெளியேறுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று தெரிவித்தார்.

மேலும், “எங்கள் கட்சி வலுவாக உள்ளது. தாமரையின் ஒரு இதழைக் கூட யாராலும் அசைக்க முடியாது. கட்சியில் இருப்பவர்கள் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றனர். எதிர்காலத்தில் பாஜக மேலும் வலுப்பெறும்” என்று கூறினார்.

அரசியல் மாற்றங்கள் மற்றும் புதிய இயக்கங்கள் தோன்றுவது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவை பாஜகவின் வளர்ச்சியை பாதிக்காது என்ற நம்பிக்கையையும் தமிழிசை சௌந்தரராஜன் வெளிப்படுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.