இளையான்குடி ஒன்றியத்தில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ வழங்கினார்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>இளையான்குடி ஒன்றியத்தில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் தமிழரசி ரவிக்குமார் எம்எல்ஏ வழங்கினார்</strong></p>
<p>சிவகங்கை, ஜன.7- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளை யான்குடி ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப் பட்டன. இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிரா மம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் கலந்து கொண்டு மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், முனைவென்றி அரசு மேல் நிலைப் பள்ளி, சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளி, இளையான்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலப் பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய எம்எல்ஏ, “மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங் களை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும்” என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் கூட்டு றவு சங்கத் தலைவர் சுப.தமிழரசன், பேரூ ராட்சித் தலைவர் நஜிமுதீன், துணைத் தலைவர் இப்ராஹிம், திமுக விவசாய அணி அமைப்பாளர் காளிமுத்து, ஒன்றிய செயலா ளர் செல்வராசன், பள்ளி தலைமை ஆசி ரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகி கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
