தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி மறைவு முதலமைச்சர், அறிஞர்கள் இரங்கல்

13 May 2026, 11:39 pm
தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி மறைவு முதலமைச்சர், அறிஞர்கள் இரங்கல்

தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி மறைவு முதலமைச்சர், அறிஞர்கள் இரங்கல்

சென்னை, மே 13- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவருமான முது பெரும் தமிழறிஞர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி (வயது 80) புதனன்று காலை சென்னையில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், காலை இயற்கை எய்திய செய்தி தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்விப்புலத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய இவர், சுவடியியல், இலக்கணம் மற்றும் மொழியியல் துறை களில் ஆழமான புலமை கொண்டவர்.

2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்த காலத்தில், பல அரிய ஆய்வுத் திட்டங்களை முன்னெடுத்தார்.

குறிப்பாக, பழந்தமிழ் ஓலைச்சுவடிகளைத் திரட்டி அவற்றைப் பாதுகாப்பதிலும், செம்மை யான முறையில் பதிப்பிப்பதிலும் இவ ருடைய பங்களிப்பு ஈடு இணையற்றது.

செம்மொழித் தமிழாய்வு ஒன்றிய நிறுவனத்தின் துணைத்தலைவராகப் பணியாற்றிய போது, தமிழ் மொழியின் தொன்மையைப் பறைசாற்றும் பல்வேறு உலகளாவிய முன்னெடுப்பு களை இவர் மேற்கொண்டார்.

இவரது மறைவிற்குத் முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படும் இவரது உடல், தற்போது சென்னை பெருங்குடி திருமலை நகர் விரிவு பாரதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், மாணவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்னாரது இறுதி நிகழ்ச்சிகள் வியாழனன்று காலை 10 மணி அளவில் அவரது இல்லத்தில் தொடங்கி நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மறைந்த தமிழறிஞர் இ. சுந்தரமூர்த்தி உடலுக்கு தமுஎகச மாநிலப் பொருளாளர் சைதை ஜெ, மாநில செயற்குழு உறுப்பினர் மயிலைபாலு, மாநிலக்குழு உறுப்பினர் ஃபாமிதா, தென்சென்னை மாவட்டத் தலைவர் சி.எம்.குமார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.