புதிர் விளையாட்டு - மஞ்சு
13 Jun 2026, 8:13 pm

புதிர் விளையாட்டு - மஞ்சு

குட்டி நட்சத்திரங்களே, இந்த வாரம் ஒரு சிறிய, ஆனால் மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய புதிர் ஆட்டம் விளையாடுவோம், ஓகேயா? மிக எளிதாக விடை சொல்லக்கூடிய கேள்வி போலத் தெரியும் – ஆனால் அவசரப்படாமல் யோசியுங்கள்.

ஓட்டப் போட்டியில் எந்த இடம்?

உங்களுடைய தோழன் காவியன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு ஓடுகிறான். அவனுக்கு நீங்கள் கைதட்டி ஊக்கம் அளிக்கிறீர்கள். அவனும் ஒவ்வொருவராகக் கடந்து முன்னேறுகிறான்.

உங்கள் தோழி கவிதா இரண்டாவது இடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் நீங்கள் குரல் எழுப்பி உற்சாகம் அளிக்கிறீர்கள்.

இப்போது காவியன் கவிதாவை முந்திவிடுகிறான். அப்படியானால் அவன் ஓட்டத்தில் எத்தனையாவது இடத்தில் இருப்பான்?தலைவரின் நண்பர், “காரன் பொய் சொல்கிறான் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்,” என்று கேட்டார். தலைவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டு கைகுலுக்கிப் பாராட்டினார். தலைவர் சொன்ன விளக்கம் என்ன?

விடை

“காவியன் முதல் இடத்திற்கு வந்துவிட்டான்” என்று உடனடியாக ஒரு யோசனை வரும். ஆனால் அப்படி அல்ல. அவன் இப்போது இரண்டாவது இடத்தில்தான் ஓடுவான். ஏனென்றால் அவன் இரண்டாவது இடத்தில் இருந்த கவிதாவைத்தான் முந்தியிருக்கிறான். முதலாவதாக ஓடிக்கொண்டிருந்தவரை அல்ல. இதை சரியாக ஊகித்த தளிர்களுக்கு பாலர் பூங்கா பாராட்டுகள்.