தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வழக்கு மன்றத்திலும் ஒலிக்கட்டும் தமிழ்

3 Sept 2026, 9:16 pm
வழக்கு மன்றத்திலும் ஒலிக்கட்டும் தமிழ்

வழக்கு மன்றத்திலும் ஒலிக்கட்டும் தமிழ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கவேண்டும். தமிழில் மனுக்கள் தாக்கல் செய்யவும், தீர்ப்புகள் தமிழில் வழங்கப்படும் கட்டமைப்பை உருவாக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அரசினர் தனித்தீர்மானம் கொண்டு வந்ததும், அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க ஒன்று.

ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் நெடுநாள் கோரிக்கையான இந்த தீர்மானத்தை ஏற்று தமிழை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக, தீர்ப்பு மொழியாக மாற்றிட வகை செய்யவேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த விருப்பமாகும். அதுபோல பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்சென்னை மாகாணம் என்று இருந்தநிலையில் உயர்நீதிமன்றமும், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்றுஅழைக்கப்பட்டது. மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களின் பெயரிலேயே உயர்நீதிமன்றங்கள் அழைக்கப்படுகின்றன.

சென்னை மாகாணம் என்பது தமிழ்நாடுஎன்று 1967ஆம் ஆண்டிலேயே மாற்றப்பட்டுவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் என்பதை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்றுமாற்றுவதும் பன்முகத்தன்மையை பறைசாற்றுவதாகவும், மாநில மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமையும்.

அவரவர் தாய்மொழியே ஆட்சி மொழியாக,பயிற்று மொழியாக, நீதிமொழியாக, நிர்வாக மொழியாக இருக்க வேண்டும் என்பது ஜனநாயக வாழ்வின் நியாயமான வெளிப்பாடாகும். ஆனால் ஒன்றிய பாஜக அரசு இந்தி மற்றும் சமஸ்கிருத மொழித்திணிப்பில் மூர்க்கமாக ஈடுபடுகிறது. அனைத்து மொழிகளும் சமமாக, சமத்துவதோடு நடத்தப்படும்போதுதான் மக்களாட்சி என்பது முழுமையான அர்த்தம் பெறும்.

தொன்மையும், வன்மையும் கொண்ட மொழியான தமிழில் வழக்காட முடியும் என்பதற்கு சிலப்பதிகாரம் உட்பட ஏராளமான இலக்கியங்கள் சாட்சியமாக விளங்குகின்றன. மேலும் இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் பெருமளவு முன்னேறியுள்ள நிலையில், தாய்மொழியே வழக்காடு மொழி என்பது முற்றிலும் சாத்தியமே. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் இந்தி மொழியே முதன்மை மொழியாக உள்ளது. தமிழ்நாடுசட்டமன்றத்தில்2006ஆம்ஆண்டிலேயே இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் மேல்நடவடிக்கை எடுக்க தமிழக வெற்றிக் கழக அரசுஉரிய அழுத்தம் தரவேண்டும். அதே போன்றுஉச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில்அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.