தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆகாய விமானத்தில் ஆருயிர் காத்த அன்பு

23 May 2026, 11:42 pm
ஆகாய விமானத்தில் ஆருயிர் காத்த அன்பு

ஆகாய விமானத்தில் ஆருயிர் காத்த அன்பு

மே 12ஆம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) விமானத்தில், துபாயிலிருந்து திருச்சிராப்பள்ளி நோக்கி புறப்பட்ட பயணத்தின் போது இந்த சம்பவம் நடந்தது.

விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களுக்குள் ஒரு பயணி திடீரென மயங்கி விழுந்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற பயணிகள் பதற்றத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது கேபின் குழுவினர் மைக் மூலம் அறிவிப்பு செய்து, விமானத்தில் யாரேனும் டாக்டர் அல்லது நர்ஸ் இருந்தால் உடனே வருமாறு கேட்டுக்கொண்டனர்.

இதைக் கேட்டதும் பின்புற இருக்கையில் இருந்த அகிலா என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உடனே அங்கே ஓடிச் சென்றார்.

ராஸ் அல் ஹைமா (Ras Al Khaimah) நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸாக பணியாற்றி வரும் அகிலா, விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அகிலா நோயாளியின் அருகில் சென்றபோது, அழைத்தும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

சுவாசம் இருந்தாலும், உடல் கடுமையாக நடுங்கிக் கொண்டிருந்தது.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் அமைதியை இழக்காமல் அகிலா அனைவருக்கும் தைரியம் அளித்தார்.

விமானத்தில் இருந்த மற்றொரு மருத்துவருடன் சேர்ந்து அந்த பயணியை விமானத்தின் முன்பகுதிக்குக் கொண்டு சென்றார்.

எந்த மருத்துவ உபகரணங்களும் இல்லாத சூழ்நிலையிலும், கிடைத்த குறைந்த வசதிகளை பயன்படுத்தி அகிலா தொடர்ந்து சிகிச்சை அளித்தார்.

மருத்துவரின் ஆலோசனையின்படி நோயாளிக்கு ஐவி (IV) செலுத்தினார்.

புல்ஸ் குறைந்து, பிபி (BP) மாற்றம் ஏற்பட்டிருந்த அந்த நபரை போர்வையால் மூடி, கை கால்களை தேய்த்து உடல் வெப்பம் குறையாமல் கவனித்தார். எ

லக்ட்ரோலைட் சப்போர்ட்டும் ஐவி (IV) திரவங்களும் வழங்கப்பட்ட பிறகு, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்த இளைஞர் மீண்டும் நினைவு பெற்றார்.

அதன்பின் அகிலா அவருக்கு ஜூஸ் கொடுத்து கவனித்தார்.

பின்னர் தன் இருக்கைக்கு திரும்பியிருந்தாலும், இடையிடையே வந்து நோயாளியின் நிலையை விசாரிக்கவும் அவர் மறக்கவில்லை.

விமானம் தரையிறங்கியதும் காத்திருந்த மருத்துவ குழுவினரிடம் அந்த பயணியை பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

அவசர சூழ்நிலையில் பதறாமல் செயல்பட்டு ஒரு மதிப்புமிக்க உயிரைக் காப்பாற்றிய அகிலாவை, பயணத்தின் போதே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.

தனது உயிரைக் காப்பாற்றிய அகிலாவுக்கு அந்த இளைஞரின் குடும்பமும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.