தீக்கதிர் முக்கிய செய்திகள்
26 May 2026, 9:04 pm

ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு சீனா பணியாமல், ரஷ்யா, ஈரானிடமிருந்து தொடர்ந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி, வியூக ரீதியிலான கையிருப்பை உருவாக்கியது. எரிபொருள் மூலம் மிகப்பெரிய லாபம் ஈட்டிய பிறகும், இதைச் செய்வதிலிருந்து மோடி அரசைத் தடுத்தது எது? அமெரிக்காவின் தடைகளுக்கு மோடி அரசு பணிந்தது ஏன்?

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு (சாமியார்) மீண்டும் ஒருமுறை, 30 நாட்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. 2017இல் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதில் இருந்து வெளியில் வருவது இது 16ஆவது முறையாகும். ஆனால் உமர் காலித் விசாரணை கூட தொடங்கப்படாமல் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். இதுதான் நம் நீதி அமைப்பு.

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி

அசாம் பொது சிவில் சட்டம் எந்த வகையிலும் பொதுவானது அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் 29ஆவது பிரிவின் கீழ் ஒவ்வொரு சமூகத்திற்கும் தங்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உரிமை உள்ளது. ஆனால் அசாம் சிவில் சட்டம் மட்டும் வித்தியாசமாக உள்ளது.

யுவதேஷ் சமூக ஊடகம்

கரப்பான் பூச்சி என்ற வார்த்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்திற்கு பயத்தை காட்டியுள்ளது. அதனால் தான் கரப்பான் பூச்சி தொடர்பான வழக்கை விசாரிக்காமல் நீதிபதி சூரியகாந்த் ஒத்திவைத்துள்ளார்.