தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் - மாணவர்கள் தமிழகத்தை ஈர்த்த ‘கரப்பான் பூச்சி’ பேரணி
24 May 2026, 9:55 pm

தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் - மாணவர்கள் தமிழகத்தை ஈர்த்த ‘கரப்பான் பூச்சி’ பேரணி

சென்னை, மே 24 - வேலைவாய்ப்பற்ற இளைஞர் களைக் ‘கரப்பான் பூச்சிகள்’ என்றும் ‘ஒட்டுண்ணிகள்’ என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இழிவு படுத்தியதைக் கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கக் கோரியும் சென்னை மற்றும் மதுரை யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் நூதன முறையில் ‘கரப்பான் பூச்சி’ பேரணி நடத்தினர்.

தில்லியில் கடந்த மே 15 அன்று நடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி சூர்யகாந்த், “வேலையில்லாமல் கரப்பான் பூச்சிகளைப் போல அலையும் இளைஞர்கள் சிலர் இருக்கிறார்கள்.

இவர்கள் ஒட்டுண்ணிகள்.

வேலை கிடைக்காததால் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்களாகவும் மாறி எல்லோரையும் தாக்கத் துவங்கு கிறார்கள்” என்று பேசியிருந்தார்.

இளை ஞர்கள் மீதான இந்த அவதூறு பேச்சுக்கு எதிராகவே ஞாயிறன்று இப்போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் நூதன போராட்டம் சென்னையில் நடைபெற்ற பேரணி யின் போது வாலிபர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.கார்த்திக் செய்தியாளர்களி டம் பேசுகையில், “இந்தியாவில் வேலை யின்றித் தவிக்கும் இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள் என்று நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.

இதற்கு எதிராக இந்தியா முழுவதும் இளைஞர்கள் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற இணைய வழி இயக்கத் தில் இணைந்துள்ளனர்.

அதன் ஒரு பகுதி யாகத் தமிழ்நாட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாண வர் சங்கம் சார்பில், ஒன்றிய அரசு வேலை வாய்ப்பையை உறுதி செய்யக் கோரி அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்துகிறோம்.

நீதிபதிகள் அரசியல் தலைவர்களைப் போல் கருத்து கூறாமல், அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீதி வழங்கினால் போதுமானது” என்றார்.

இப்பேரணியில் பங்கேற்றவர்கள் கரப்பான் பூச்சி படத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு நூதன முறையில் போராடினர்.

வாலிபர் சங்க மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜா.பார்த்தி பன் தலைமையில் நடைபெற்ற இப்பேர ணியில் பொருளாளர் தீ.சந்துரு, இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் சி.மிருதுளா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர்கள் வே.அருண்குமார் (மத்திய சென்னை), குமரன் (தென் சென்னை), விஜய் (வடசென்னை), பொருளாளர்கள் லோ.விக்னேஷ் (மத்திய சென்னை), சிந்தன் (தென் சென்னை), ஸ்டாலின் (வடசென்னை) உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் பேரணி இதேபோல், மதுரையில் காந்தி அருங்காட்சியகத்திலிருந்து தமுக்கம் மைதானம் வரை ‘காக்ரோச்’ (Cockroach) என்ற பெயரில் இளைஞர்கள் முன்னெடுத்துள்ள இயக்கத்தின் பேரணி நடைபெற்றது.

இதனை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநகர், புறநகர் மாவட்டக்குழுக்கள் ஒருங்கிணைத்தன.

பேரணியில் வாலிபர் சங்க மாநிலத் துணைத் தலைவர் செல்வா பேசுகையில், “நீதிபதியின் கருத்தால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் தங்களைக் ‘கரப்பான் பூச்சி’ என அடையாளப்படுத்திக் கொண்டு இணையத்தில் தொடங்கிய ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) பக்கம், நாட்டின் முன்னணி ஆளும் கட்சிகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை விடவும் வேகமாகப் பரவி லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்த்துள்ளது.

இளைஞர்களைப் ‘பயனற்ற தலைமுறை’ என்று விமர்சித்தவர்களுக்கு எதிரான வலுவான அரசியல் மற்றும் அதிகார எதிர்ப்பு வடிவமாகவே இந்த இயக்கம் பார்க்கப்பட வேண்டும்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இப்பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மோடி ஆட்சியில் வேலையின்மை மிகக் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் நீதிபதி உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் இத்தகைய கருத்துக்களுக்கு எதிராக நாடு முழுவதும் இளைய தலைமுறையினர் கொதிப்படைந்துள்ளனர்.

அதன் வெளிப்பாடாகவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரிலான இணைய தள எதிர்ப்பு இயக்கத்திற்கு வலு அதிகரித்துள்ளது.