தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர்வளத்துறை தற்காலிகப் பணியாளர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தல்!

8 hours before
நீர்வளத்துறை தற்காலிகப் பணியாளர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தல்!

நீர்வளத்துறை தற்காலிகப் பணியாளர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தல்!

சென்னை, ஆக. 6 -தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையில் தற்காலிக நியமனத்தின் கீழ் பணிபுரியும் ஊழி

யர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்கப்படாதது கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ள தாகவும், சம்பள நீட்டிப்பு ஆணையை உடனடியாக வழங்கி ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு பொதுப் பணித்துறை கணக்கு மற்றும் ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆ.செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நீர்வளத்துறையில் தற்காலிகப் பணியில் உள்ள அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும்2026 ஜூலை மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. சம்பளம் கிடைக்காததால் ஊழியர்கள் தங்கள் குடும்பச்செலவுகளைச் சமாளிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். துறைச் செயலாளர் மற்றும்முதன்மைத் தலைமைப் பொறியாளரின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டும் இந்நிலை நீடிக்கிறது.

அனைத்து அலுவலகங்களுக்கும் சம்பள நீட்டிப்பு அரசாணை (Salary Extension GO) இல்லாததால் கருவூலத்தில்சம்பளப் பட்டியலைச் சமர்ப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாகச் சம்பள நீட்டிப்பு ஆணையை வழங்கிட வேண்டும். மேலும், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் விருப்ப மாறுதல்கள் கோரி விண்ணப்பித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக மாறுதல் ஆணைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.அமைச்சர்களின் ஆணைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூலை 15 மற்றும் 16தேதிகளில் அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.

எனவே, குழந்தைகளின் பள்ளிக்கல்விச் செலவுகள் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளஊழியர்களின் நலனைக் கருதி, உடனடியாக ஜூலை மாத ஊதியத்தை வழங்கவும், விருப்ப மாறுதல் ஆணைகளைவிரைந்து வழங்கவும் தமிழக அரசும் துறை அமைச்சர்களும் முன்வர வேண்டும் என அவர்கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.