தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தின் தலைசிறந்த மரச்சிற்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு

8 Oct 2026, 12:34 am
தமிழகத்தின் தலைசிறந்த மரச்சிற்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு

தமிழகத்தின் தலைசிறந்த மரச்சிற்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு

சென்னை,அக்.7-தமிழகத்தின் தலைசிறந்த மரச் சிற்பக் கலைஞர்கள் ஐந்து பேருக்கு சென்னையில் புதனன்று (அக்.7) விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.பெருந்தச்சர் அப்பர் இலட்சுமணன், டாக்டர் ஆர்.ரங்காச்சாரி, எஸ். மாசானம்ஆச்சாரி, எஸ். திருநாவுக்கரசு மற்றும் குமாரசாமி ரமேஷ் ஆகிய 5 கலைஞர்கள் ஷரான் பிளை நிறுவனத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் “ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்” விருதுகளின் ஏழாவது பதிப்பில் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த கலைஞர்களின் சிறப்பான கைவினைத் திறன், அர்ப்பணிப்பு மற்றும் இந்தியாவின் வளமான மரச்சிற்பக் கலை பாரம்பரியங்களைப் பாதுகாப்பதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள்வழங்கப்பட்டன.

2026-ஆம் ஆண்டுக்கானவிருதுகள், பல தலைமுறைகளாக மரங்களைச் செதுக்குவதில் நிபுணத்துவம் பெற்று,அதே நேரம் புதுமையும் புனைந்து வரும் தச்சுக்கலைஞர்களின் வலிமையைக் கவுரவிக்கும் வகையில், நாட்டின்மிக நுணுக்கமான மரக் கலைப்படைப்புகளுக்குப் பின்னால் இருக்கும் கலைஞர்கள் இதில் கவுரவிக்கப்பட்டனர். கோவில் தேர்கள் மற்றும் சிற்பங்கள் முதல் பிரமாண்டமான கதவுகள் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த மரவேலைப்பாடுகள் வரை,விருது பெற்ற கலைஞர்கள்தலைமுறை தலைமுறையாகப் பரிமாறப்பட்ட அறிவு,திறமை மற்றும் விடாமுயற்சியின் பிரதிநிதிகளாக விளங்குகின்றனர். இவர்களின் பங்களிப்பு பாரம்பரிய கைவினைக் கலையைஇன்றும்உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஷ்ணு கெமானி கூறினார்.

இவர்களின் பணிகள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் உள்ள கோவில்கள் மற்றும் பாரம்பரியத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், கைவினைத் திறனைத் தாண்டி, பயிற்சி அளித்தல், அறிவைப் பகிர்தல் மற்றும் கைவினைக் கலைஞர்களின் சமூகத்திற்கு ஆதரவளித்தல் போன்ற பணிகளிலும் அவர்கள் தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.