தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இது ஒரு அமைப்பின் பேரணி மட்டுமல்ல! - அ.ராதிகா

21 Jun 2026, 9:20 pm
இது ஒரு அமைப்பின் பேரணி மட்டுமல்ல! - அ.ராதிகா

இது ஒரு அமைப்பின் பேரணி மட்டுமல்ல!

இன்னும் எத்தனை குழந்தைகள்? இன்னும் எத்தனை பெண்கள்? தமிழகத்தை உலுக்கும் பெண்கள், குழந்தை கள் மீதான வன்முறைகளுக்கு முடிவு எப்போது? சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் இன்று இந்தக் கேள்விதான் அச்சமாக எழுந்து நிற்கிறது.

பள்ளிக்குச் சென்ற குழந்தை பாதுகாப்பாக வீடு திரும்புமா? வேலைக்குச் சென்ற பெண் உயிருடன் திரும்புவாரா? தெருவில் நடந்து செல்லும் சிறுமி பாதுகாப்பாக இருப்பாளா? பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பெண் பாலியல் சீண்டலின்றி வீடு சேருவாரா? இவை ஒரு நாகரிக சமூகத்தில் எழக்கூடாத கேள்விகள். ஆனால், இன்று தமிழகத்தில் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் இந்த அச்சத்துடன்தான் வாழ்கிறார்கள்.

ஒவ்வொரு வாரமும், சில நேரங்களில் ஒவ்வொரு நாளும்கூட, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான கொடூரமான வன்முறை கள் பற்றிய செய்திகள் நம்மைத் துரத்து கின்றன. பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சிறுமிகள்; கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட பெண் குழந்தைகள்; குடும்ப வன்முறையால் உயிரிழக்கும் பெண்கள்; இணையவழி பாலி யல் குற்றங்களுக்கு பலியாகும் மாணவிகள் என இக்கொடுமைகள் தொடர்கின்றன.

செய்தித்தாள்களில் ஒரு நாள் தலைப்புச் செய்தியாக வரும் இச்சம்பவங்கள், மறு நாள் வேறொரு சம்பவத்தால் மறக்கடிக்கப் படுகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையில் அந்த இருள் ஒருபோதும் மறைவதில்லை. ஒரு மூன்று வயதுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாத சமூகம், எந்த முன்னேற்றத்தைப் பற்றிப் பெருமை பேச முடியும்? ஒரு பெண் இரவு நேரத்தில் தனியாக நடக்க அஞ்சும் நிலை இருந்தால், அந்தச் சமூகத்தை ஜனநாயக மானது என்று எப்படி அழைக்க முடியும்? ஒரு குழந்தையின் உடல்கூட பாதுகாப்பாக இல்லா தபோது, வளர்ச்சி, முதலீடு, பொருளாதாரம் என்று பேசுவதற்கு என்ன அர்த்தம் இருக் கிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இருக்கிறது.

பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சார மும், வன்முறையைச் சாதாரணமாக்குவது, இயல்பாக்குவது என்ற சமூகப் போக்கும், பாலின சமத்துவத்தை மறுக்கும் மனநிலையும் இணைந்து உருவாக்கியுள்ள பேராபத்துதான் இன்று நம் கண்முன் நிற்கிறது. இது சமூ கத்தின் ஆழத்தில் வேரூன்றியுள்ள ஆணாதிக்க மனப்போக்கின் வெளிப்பாடு; பெண்களைச் சக மனுசியாக அல்லாமல் ஒரு பொருளாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கப் பிற்போக்குச் சிந்தனையின் விளைவு. இவையெல்லாம் இணைந்தே இத்தகைய கொடும் குற்றங்களை நிகழ்த்துகின்றன.

போதைப்பொருட்களின் பரவலும் குற்றப் பின்னணியும்

இதனோடு இணைந்து தமிழகத்தின் பல பகுதிகளில் போதைப்பொருட்களின் பரவல் கவலைக்கிடமான அளவிற்கு உயர்ந்துள் ளது. பள்ளி மாணவர்களிடம் இருந்து இளைஞர்கள் வரை போதைப்பழக்க த்திற்குத் தள்ளப்படுகிறார்கள் என்ற செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

போதை என்பது ஒருவரின் உடலையும் மனதையும் மட்டும் சீரழிப்பதில்லை; அது குடும்பங்களைச் சீரழிக்கிறது, சமூக உறவுகளை உடைக்கிறது, குற்றங்களை உருவாக்குகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பல வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் போதையும் இருக்கிறது என்பதைக் காவல்துறை பதிவுகளே காட்டுகின்றன. போதைப்பொருட்கள் எங்கிருந்து வரு கின்றன? அவற்றை யார் விற்கிறார்கள்? யார் பாதுகாக்கிறார்கள்? ஏன் இன்னும் அவை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கைதுகளுக்கு அப்பாற்பட்ட நீதியின் தேடல்

பெண்கள், குழந்தைகள் மீதான வன் முறையில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைது செய்வதால் மட்டுமே நீதி கிடைத்துவிடுமா? ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறது; ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார்; மக்கள் கொந்தளிக் கிறார்கள்; ஊடகங்கள் செய்தி வெளியிடு கின்றன; காவல்துறை குற்றவாளியைக் கைது செய்கிறது; அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திப்பார்கள்.

அதன்பிறகு என்ன நடக்கிறது? சில நாட்கள் அந்தச் சம்பவம் பேசப்படும். பிறகு? பிறகு அந்த வழக்கு எங்கே போகிறது; அந்தக் குழந்தைக்கு நீதி கிடைத்ததா; அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு நியாயம் கிடைத்ததா என்பதைப் பற்றி யாரும் பேசுவ தில்லை.

குற்றம் நடந்த செய்தி தலைப்பாகிறது ஆனால் நீதியைத் தேடி அலைகின்ற குடும்பங்களின் கண்ணீர் தலைப்பாக மாறுவதில்லை. பல குடும்பங்கள் வருடக்கணக்கில் நீதி மன்ற வாசல்களில் காத்திருக்கின்றன. “இன்று விசாரணை இல்லை”, “ஆவணம் வர வில்லை”, “அறிக்கை தாக்கல் செய்யப்பட வில்லை”, “சாட்சி வரவில்லை” என்ற கார ணங்களால் வழக்குகள் தள்ளிப்போகின்றன.

ஒரு தாய் தனது குழந்தையை இழந்த துயரத்தோடு வாழ்வது மட்டுமல்ல, நீதிக்காக ஆண்டாண்டுகள் போராட வேண்டிய கட்டா யத்திற்கும் தள்ளப்படுகிறார். அது மிகப்பெரிய கொடுமை. குற்றவாளியைக் கைது செய்வது எளிது, ஆனால் அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பது எளிதாக்கப்பட்டுள்ளதா? அங்கே தான் பல நேரங்களில் நீதி தோற்கடிக்கப் படுகிறது.

பல நேரங்களில் அரசியல் செல்வாக்கும், பண பலமும், சமூக அழுத்தங் களும் நீதியின் பாதையில் குறுக்கிடுகின்றன. இதன் விளைவாகக் குற்றம் செய்தவன் வெளியில் நடக்கிறான்; பாதிக்கப்பட்ட குடும்பம் தண்டனை அனுபவிக்கிறது. ஒரு குற்றவாளி தப்பிக்கும்போது ஒரு குடும்பம் மட்டும் தோற்பதில்லை.

பொறுப்பும் கடமையும்: மாதர் சங்கத்தின் பேரணி முழக்கம்

“எத்தனை பேரைக் கைது செய்தீர்கள்?” என்ற கேள்வியோடு, “எத்தனை பேருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தீர்கள்?” என்ற பதிலையும் எதிர்பார்க்கிறோம். அது அரசின் மிக முக்கியப் பொறுப்பு.

ஒவ்வொரு பாலியல் குற்றவாளியும் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு வழக்கும் முழுமை யாக விசாரிக்கப்பட வேண்டும்; ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் நீதி உத்த ரவாதப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அரசின் மீதும், நீதித்துறையின் மீதும் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு எதிராக மக்கள் குரலை ஒன்றிணைக்கும் வகையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஜூன் 23 அன்று சென்னை, மதுரை, திருப்பூர் ஆகிய நகரங் களில் மாபெரும் பேரணிகளை நடத்துகிறது. இது ஒரு அமைப்பின் பேரணி மட்டுமல்ல.

தன் மகளின் பாதுகாப்புக்காக அஞ்சும் தாயின் கவலையை உரக்கச் சொல்ல, தன் குழந்தையின் எதிர்காலத்திற்காகக் கவலைப்படும் தந்தையின் கண்ணீரைப் பேச, நீதிக்காகக் குரல் கொடுக்கும் இளைஞர்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க, பாதுகாப்பான தமிழகத்தை விரும்பும் ஜனநாயக சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதற்கான பேரணி. வாரீர், ஒன்றிணைவோம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.