தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணிக்கு வெண்கலம்
27 Oct 2026, 10:31 pm

தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணிக்கு வெண்கலம்

சின்னாளப்பட்டி, அக்.27-18-வது தேசிய அளவிலான ரோல்பால் சாம்பியன் ஷிப் போட்டியில், தமிழக அணி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கங் களை வென்றது.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய ரோல்பால் போட்டிகள் கோயம்புத்தூரில் நடைபெற்றன. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண் கள் அணிகள் பங்கேற்றன. தமிழக அணி சார்பில் 12 மாணவர்களும், 12 மாணவிகளும் கலந்துகொண்டனர்.தமிழக அணியில், சின் னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தாரிக்இஸாம் (கேப்டன்), அகிலன், சஞ்சய்குமார், கவின், ஜனகன் ஆகிய ஐந்து மாணவர்கள் இடம் பெற்றனர். பெண்கள்பிரிவில் சாதனா, சஞ்சனாஸ்ரீ, தீபிகா, மதுஸ்ரீ ஆகிய நான்கு மாணவிகள் இடம்பிடித்தனர்.

பரபரப்பாக நடைபெற்ற போட்டிகளில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தமிழக அணிமூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக் கங்களைத் தட்டிச் சென் றது.

பாராட்டுபோட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்குப் பாராட்டு விழாநேற்று இரவு சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.இதில் சர்வதேச நடுவரும் பயிற்சியாளருமான பிரேம்நாத் மற்றும் பயிற்சியாளர்கள் கலையரசன், தங்கலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்ற வீரர், வீராங் கனைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வீரர், வீராங்கனைகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.