தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காற்றின் வேகம் சற்று குறைவு காற்றாலை மின் உற்பத்தி 3,705 மெகா வாட்டாக சரிவு

13 Jul 2026, 9:48 pm
காற்றின் வேகம் சற்று குறைவு காற்றாலை மின் உற்பத்தி  3,705 மெகா வாட்டாக சரிவு
<p><strong>காற்றின் வேகம் சற்று குறைவு காற்றாலை மின் உற்பத்தி 3,705 மெகா வாட்டாக சரிவு</strong></p><p>திருநெல்வேலி, ஜூலை 13 - நெல்லை மாவட்டத்தில் காற்றின் வேகம் சற்று குறைந்த நிலையில் காற்றாலை மின் உற்பத்தியும் இறங்கு முகமாக உள்ளது. தமிழகத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காற்றாலைகள் மின் உற்பத்தி நடந்து வருகிறது. இவற்றின் மூலம் வருடம் முழுவதும் மின் உற்பத்தி நடைபெற்றாலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்று சீசனில் மின் உற்பத்தி உச்சத்தை தொடுகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் தமிழகத்திற்கு அதிகளவில் காற்று சீசனில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டின் காற்று சீசன் காரணமாக, கடந்த சில வாரங்களாக காற்றாலை மின் உற்பத்தி சராசரியாக தினமும் 4000 மெகாவாட் அளவைத் தொட்டு நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்தது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி அதிகபட்சமாக 5 ஆயிரம் மெகாவாட்டை ஒரே நாளில் கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தி 3,705 மெகா வாட்டாக பதிவாகி உள்ளது. இனி வரும் நாட்களில் காற்று பலமாக வீசினால் மின் உற்பத்தி மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.