தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கைகொடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் : காற்றாலை மின் உற்பத்தியில் மைல்கல்

14 hours before
கைகொடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் : காற்றாலை மின் உற்பத்தியில் மைல்கல்

கைகொடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் : காற்றாலை மின் உற்பத்தியில் மைல்கல்

தமிழகத்தின் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில், காற்றாலை மற்றும் சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் மிக முக்கியப் பங்கை வகித்து வருகின்றன. குறிப்பாக, நடப்பாண்டு காற்றாலை சீசனில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 12,356.3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கான கட்டமைப்பு விரிவாக்கத்தில் தமிழகம் தொடர்ந்துமுன்னணி வகித்து வருகிறது. இதன்படி, கடந்த ஆண்டு 9,299 மெகாவாட்டாக இருந்த மொத்த நிறுவப்பட்ட திறன், நடப்பாண்டில் 9,495 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், நடப்பாண்டில் ‘சூப்பர் எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் காரணமாக காற்றின் வேகம் குறைந்து, மின் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியது. இருப்பினும், எதிர்பார்த்ததை விட காற்றின் வேகம் சாதகமாக அமைந்ததால்உற்பத்தியில் பெரிய அளவிலான பாதிப்பு ஏதுமின்றி திட்டமிட்ட இலக்கு எட்டப்பட்டது.

வழக்கமாக ஆண்டுதோறும் மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை சுமார் 6 மாதங்கள் நீடிக்கும் காற்றாலை சீசன், இந்த ஆண்டு மே 19-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 27-ம் தேதியுடன் (சுமார் 4 மாதங்களிலேயே) வழக்கத்தை விட முன்னதாகவே நிறைவடைந்துள்ளதாக காற்றாலை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். சீசன் காலம் குறைந்தபோதிலும், நடப்பாண்டு காற்றாலை சீசனில் ஒரே நாளில் 100 மில்லியன்யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிகழ்வு மொத்தம் 57 முறை பதிவாகி முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.

வழக்கமாக அதிக காற்று வீசும் ஆடி மாதத்தில் உற்பத்தி உச்சத்தை தொட்டது. ஆடி மாதத்தின் 31 நாட்களில், 27 நாட்கள் தினசரி மின் உற்பத்தி 100 மில்லியன் யூனிட்டை கடந்து சாதனை படைத்தது. குறிப்பாக, ஆகஸ்ட் 1-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 142.43 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்பட்டது. அன்றைய தினம் மொத்த நிறுவப்பட்ட திறனான 9,495 மெகாவாட்டில், 6,731 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி திறம்படப் பயன்படுத்தப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளின் உற்பத்தி கடந்த மூன்று ஆண்டுகளின் காற்றாலை மின் உற்பத்தி தரவுகளை உற்றுநோக்கினால், தமிழகத்தின் கட்டமைப்புத் திறனும் மின் உற்பத்தியும் சீரான வளர்ச்சியை சந்தித்து வருவது தெளிவாகிறது. கடந்த 2024-ம் ஆண்டு சீசன் காலத்தில் 8,900 மெகாவாட் திறனுடன் சுமார் 11,800 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் உச்சபட்ச தினசரி உற்பத்தி 111 மில்லியன் யூனிட்டாக இருந்தது. தொடர்ந்து 2025-ம் ஆண்டில் நிறுவப்பட்ட திறன் 9,299 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டு, சீசன் முழுமைக்கும் சேர்த்து 12,360 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி பெறப்பட்டன. அப்போது உச்சபட்ச தினசரி உற்பத்தி 123.85 மில்லியன் யூனிட்டாகப் பதிவானது.நடப்பாண்டில் (2026) நிறுவப்பட்ட திறன் 9,495 மெகாவாட்டாக அதிகரித்து, சீசன் காலம் 4 மாதங்களாக சுருங்கிய நிலையிலும் 12,356.3 மில்லியன் யூனிட் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், வரலாற்றிலேயே இல்லாத வகையில் தினசரி உச்சபட்ச உற்பத்தியாக 142.43 மில்லியன் யூனிட் எட்டப்பட்டுள்ளது இத்துறையின் மைல்கல்லாக கருதப்படுகிறது.

கோடைக்காலம் மற்றும் தொழிற்சாலைகளின் அதிகப்படியான மின்தேவை காலங்களில், நிலக்கரி சார்ந்த அனல்மின் நிலையங்களின் சுமையை குறைப்பதில் காற்றாலை மின்சாரம் பிரதான பங்காற்றுகிறது. கார்பன் உமிழ்வை குறைத்து, பசுமை ஆற்றல் இலக்குகளை எட்ட தமிழகத்திற்கு இது பெரிதும் உதவுகிறது. அத்துடன், அனல்மின் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவில் தடையில்லா மின்சாரத்தை மாநிலத்தின் மின் கட்டமைப்புக்கு வழங்க காற்றாலைகள் கைகொடுக்கின்றன. காலநிலை மாற்றங்களால் சீசன் காலம் மாறுபட்டாலும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மறுசீரமைப்பு மூலம் காற்றாலை மின் உறபத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.(ந.நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.