தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆராய்ச்சியில் இந்தியாவின் தலைநகரமாக தமிழ்நாடு மாறும்

26 Nov 2025, 4:29 pm
ஆராய்ச்சியில் இந்தியாவின் தலைநகரமாக தமிழ்நாடு மாறும்

ஆராய்ச்சியில் இந்தியாவின் தலைநகரமாக தமிழ்நாடு மாறும்

கோவை, நவ.26- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட் டில், இந்தியாவின் தலைநகரமாக தமிழ்நாடு மாறும் என அமைச்சர் டி. ஆர்.பி.ராஜா நம்பிக்கையுடன் தெரி வித்தார். கோவையில் நடைபெற்ற டி.என் ரைஸ் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்தானது. இந்நிகழ்ச்சிக்கு பின்  செய்தியாளர்களிடம் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், இம்மாநாட்டின் மூலம் 42 ஆயிரத்து 792 கோடி ரூபாய் பெரு நிறுவனங்கள் மூலம்,  எம்எஸ்எம்இ மூலம் 1052 கோடி ரூபாய் என 1 லட்சத்து 709 நபர்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக 43,844 கோடிக்கான புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட் டுள்ளது. அதேபோல் செமி கண் டக்டர் தயாரிப்பு இயந்திரத்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் கோவையில் துவங்கியுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெரிய அளவில் வளர வேண்டும் என்பதே நமது நோக்கம். குறிப் பாக கோவையில் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் உள் ளது. அதனைப் பயன்படுத்தி அவர் களை தொழில் நிறுவனங்களுடன் பேச வைத்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளை கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு உற்பத்தி மையமாக வேண்டும் என்பதுதான் இந்த அரசின் இலக்காக உள்ளது. உற்பத்தி மற்றும் சேவையில் சிறந்து விளங்கி வருகிறோம். இப்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிலும் கவனம் செலுத்த  வேண்டியுள்ளது. ஆராய்ச்சி மற் றும் மேம்பாட்டில் இந்தியாவிற்கே தலைநகராக தமிழகம் திகழும். இன்னும் ஒரு சில நாட்களில் கோவைக்கு முக்கிய அறிவிப்பு வர வுள்ளது. அதேபோல், டிச.7 ஆம்  தேதி மதுரை மாவட்டத்தில் முத லீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதிலும் பல்வேறு முக் கிய அறிவிப்புகள் இருக்கும். அதிக  முதலீடு செய்தாலும் குறைவான முதலீடு செய்தாலும் ஒரே மாதிரி யான முக்கியத்துவத்தை இந்த அரசு கொடுத்து வருகிறது, என் றார்.

சிப் மற்றும் அட்வான்ஸ்டு பேக்கேஜிங் நிறுவன முதலீட்டாளர் சுரேஷ் பாபு கூறுகையில், தமிழ்நாட்டில் உற்பத்தி நிறுவனங்களில் முத லீடு செய்ய நல்ல சூழல் இருப்பதால், எங்கள் நிறுவனத்தை இங்கு  துவங்க திட்டமிட்டுள்ளோம். அரசு ஊக்குவிப்பதால் செமி கன்டெக் டரில் முதலீடு செய்யவுள்ளோம். அரசு ஒத்துழைப்பால் 3 ஆண்டு களில் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும். இங்குள்ள  சிங்கிள் வின்டோ சிஸ்டத்தால் அனுமதி பெறுவது எளிமையாக்கப் பட்டுள்ளது. இதுவரை கட்டிட அனுமதி பெற சுமார் 1.5 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்போது 2 மாதத்தில் அனுமதிகளை பெற்று கொடுத்துவிட்டனர், என்றார். இதேபோல் கேரளாவை சேர்ந்த முதலீட் டாளர் ஒருவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தை பல்வேறு மாநிலங்க ளில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்கள். ஆனால் தமிழகத்தில் உற்பத்திக்கு முதலீடு செய்ய அதிக வசதி வாய்ப்புகளை செய்து  கொடுத்துள்ளனர். இதன் காரணமாகவே மற்ற மாநிலங்களுக்கு செல்லாமல் தமிழகத்தில் முதலீடு செய்ய வந்துள்ளோம், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.