தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
12 Jul 2026, 9:30 pm

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூலை 12- மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 6 நாட்களுக்குத் தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜூலை 12 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்யக்கூடும்.

மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும்.

அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 13 முதல் 18 வரையிலான காலகட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை யும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையும் நிலவும்.

ஜூலை 15 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். ஜூலை 16 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத் தில் காற்று வீசும்.

அரபிக்கடல் பகுதியில் ஜூலை 12 முதல் 15 வரை மத்திய மேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என்பதால், இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.