தமிழ்நாடு எதிர்நோக்கும் நீர்ப் பற்றாக்குறைகள்!
5 Oct 2026, 10:08 pm

தமிழ்நாடு எதிர்நோக்கும் நீர்ப் பற்றாக்குறைகள்!

தென்மேற்குப் பருவமழை குறைவாகப் பெய்ததன் விளைவாக, தமிழ்நாட்டின் நீர்த்தேக்கங்கள் கடுமையான நீர் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளன. மாநிலத்தின் 90 நீர்த்தேக்கங்களில் 67ல் நீர் இருப்பு கொள்ளளவில் 25%க்கும்குறைவு; 17ல் 25–50% உள்ளது; வெறும் 6 நீர்த்தேக்கங்களில் மட்டுமே ஓரளவு கணிசமான நீர் உள்ளது. அக்டோபர் 2 அன்று மொத்தநீர்த்தேக்கங்களில் 74.412 டிஎம்சி நீர் இருப்பு — மொத்த கொள்ளளவு 224.34 டிஎம்சியில் வெறும் 33.17%. கடந்த ஆண்டு இதே நாளில்181.50 டிஎம்சி (80.94%) இருந்தது என்பதுடன் ஒப்பிடும்போது நிலைமை யின் தீவிரம் புரியும்.

முன்னுக்கு வரும் பற்றாக்குறைகள்

தென்மேற்குப் பருவமழை முடிந்துவிட்ட நிலையில், வடகிழக்குப்பருவமழை வரும்வரை இந்நீர் இருப்பு குடிநீர், பாசனம், மின்சாரம் என மூன்று வகைப் பற்றாக்குறைகளையும்உருவாக்கும் அபாயம் உள்ளது. சென்னை பிரிவின் 28 நீர்த்தேக்கங்களில் 35%-ம், திருச்சி பிரிவின் 6 நீர்த்தேக்கங்களில் 37%-ம் மட்டுமே நீர் இருப்பதால், இப்பகுதிகள் கடுமையாகப்பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.பொதுவாகத் தமிழ்நாட்டுக்கு தென்மேற்குப் பருவமழை 36%-ம், வடகிழக்குப் பருவமழை 48%-ம் மழையைத் தரும். இந்தியா முழுவதும் தென்மேற்குப் பருவமழை 12% குறைவாகப் பெய்திருக்க, தென் மாநிலங்களில் இது 23% குறைவு. நாகை, தஞ்சை, கரூர்,தூத்துக்குடி, செங்கல்பட்டு மாவட்டங்களில் 35%-ம், நீலகிரியில் 50%-ம் மழைக் குறைவு பதிவானது.மழைக் குறைவு பாசனத்தைக் கடுமையாகப் பாதிக்கும்; கர்நாடகம் ஏற்கெனவே காவிரி நீர் தர மறுக்கிறது. மேட்டூர் அணையில் 40% நீர் மட்டுமே இருப்பதால், நீர் திறந்தாலும் கடைமடைப் பகுதிகளை சென்றடையாது — டெல்டா நெல் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அரிசிக்கு அண்டை மாநிலங்களைச் சாரவேண்டிய நிலை வரும். ஏற்கெனவே அரிசி விலை கிலோவுக்கு ரூ.5–10 உயர்ந்துள்ளது, இன்னும் உயரும் அபாயம்உள்ளது. நீர்த்தேக்கங்களில் நீர் குறைவதால் குடிநீர் திறப்பும் பாதிக்கப்படலாம்; புனல் மின் உற்பத்தியும் குறைந்து மின் பற்றாக்குறையும் ஏற்படலாம்.

எல் நினோ ஆபத்தும் எண்ணெய் விலையும்

அமெரிக்கா–ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணையும், ஹவுதி–சவூதி போரால் செங்கடல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு, எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது; ஏற்கெனவே நயாரா நிறுவனம் பெட்ரோல்ரூ.5, டீசல் ரூ.3 உயர்த்தியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலை எண்ணெய் வாங்கினால் இந்திய ஏற்றுமதிக்கு 100% வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டுகிறார். இச்சூழலில் நீர்த்தேக்கக் குறைவு மேலும் சிக்கல்களை உருவாக்கும்; வடகிழக்குப் பருவமழை சரியாகப் பெய்யத்தான் வேண்டும். எல் நினோ காரணமாக அதீதவெயில் அல்லது அதீத மழை ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்; தமிழ்நாட்டுக்கு ஒப்பீட்டளவில்பாதிப்பு குறைவு எனினும், அரியலூர், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர்,ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படலாம்என ஒன்றிய அரசே அறிவித்துள்ளது.கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா ஏற்கெனவே வறட்சிப் பகுதிகளாக அறிவித்துவிட்ட நிலையில், அதே சூழலிலிருக்கும் தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒன்றிய அரசும் தவெக மாநில அரசும் இச்சூழலை உணர்ந்து, மக்களைக் காக்கப் போர்க்காலநடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.தரவுகள்: தமிழ்நாடு நீர்வளத் துறை மற்றும் 03.10.2026 தேதிய TNIE

முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு (மில்லியன் கன அடியில்)

நீர்நிலை கொள்ளளவு 02.10.2025 02.10.2026 %

மேட்டூர் 93,470 87,676 37,731 40.37%

பவானி சாகர் 32,800 27,160 5,377 16.39%

பரம்பிகுளம் 13,454 13,360 9,924 73.76%

பெரியார் 10,570 4,966 2,078 19.66%

வைகை 6,091 4,615 1,107 18.17%

பாபநாசம் 5,500 2,351 712 12.95%

மணிமுத்தாறு 5,511 3,058 971 17.62%

பேச்சிப்பாறை 4,350 3,247 1,257 28.90%

சாத்தனூர் 7,321 6,242 2,193 29.95%