தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் அறிவிப்பு

23 Dec 2025, 4:05 pm
தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் அறிவிப்பு
<p><strong>தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் அறிவிப்பு</strong></p> <p>ஈரோடு, டிச. 23- ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறை வேற்றப்பட்டு அதற்கு தீர்வு காண வலியுறுத்தி உண்ணா விரதம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழிற்பயி ற்சி அலுவலர் சங்கத்தின் மா நில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தோழர் என்.பஞ்சலிங்கம் அரங்கில் நடைபெற்றது. பொது அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கிளை தலை வர் என்.சுமதி தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் வி.சோமசுந்தரம், மாவட்டத் தலைவர் எஸ்.ரமேஷ், தொழிற்பயிற்சி அலுவ லர் சங்க மாநிலத் தலைவர் எம்.சீனிவாசன் ஆகியோர் சங்க கொடிகளை ஏற்றி வைத் தனர். வரவேற்புக்குழு செயலாளர் ஆர்.சந்திர சேகரன் வரவேற்றார். கோவை மண்டல பயிற்சி இணை இயக்குநர் ஜெ. அமலா ரெக்சிலின் சிறப்புரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலை வர் ஏ.அம்சராஜ், மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோ கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஓய்வூதியர் சங்க &nbsp;மாநிலத் தலைவர் என். ஜெயசந்திரன் நிறைவுரை யாற்றினார். &nbsp;இதனைத்தொடர்ந்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாநி லத் தலைவர் எம்.சீனிவா சன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.நட ராஜன் வரவேற்றார். பொதுச் செயலாளர் என்.ரமேஷ் வேலை அறிக்கை சமர்பித்தார். பொருளாளர் என்.திருநாவுக்கரசு நிதி நிலை அறிக்கை சமர்பித்தார். &nbsp;தீர்மானங்கள் தொழிற்பயிற்சி நிலை யங்களில் பயிலும் பெண் பயிற்சியாளர்களுக்கு என &nbsp;தனியாக விடுதிகள் எங்கும் இல்லை. எனவே, தொழிற் பயிற்சி நிலைய மகளிர் பயி ற்சியாளர்கள் பயன்பெறும் வகையில் ஒரே இடத்தில் உணவுடன் கூடிய விடுதியை அமைத்துத்தர வேண்டும். சேலம், கோவை, ஈரோடு, ஆனைகட்டி போன்ற வாய்ப் புள்ள அனைத்து இடங்களி லும் உணவுடன் கூடிய விடுதி மகளிருக்கு அமைத்துத் தர வேண்டும். &nbsp;என்டிசி முடித்து என்ஏசி &nbsp;பயிற்சி பெறும் பயிற்சியாளர் களை அந்நிறுவனத்திலே யே அரசு நிறுவனமாக இருந் தால் 100 சதவீதமும், தனி யார் நிறுவனமாக இருந்தால் 25 சதவீதமும் பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசு உத்தர விட வேண்டும். &nbsp;10 ஆண்டுகளாக காலி யாக உள்ள பொருத்துநர் (காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர்) பிரிவுக்கு பயிற்றுநர் நியமிக்க வேண் டும். கல்வித்துறையில் மாண வர்களுக்கு வழங்கப்படு வது போல் ஐடிஐயில் பயிற்சி பெறும் ஏழை பயிற்சியாளர் கள் பயன்பெறும் வகையில் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிதாக துவங்கப்பட்ட அனைத்து தொழிற்பயிற்சி நிலைய விடுதிகளிலும் சமையலர் பணியிடங்களை தோற்றுவித்து மாணவர் களுக்கு உணவு வசதியுடன் கூடிய தங்கும் விடுதி ஏற்படுத்தி தர வேண்டும். ஐடிஐயில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் &nbsp;சுகாதாரப் பணியாளர் களுக்கு குறைந்தபட்ச ஊதி யம் ரூ.15,000/- நிர்ணயித்து வழங்க வேண்டும். 50 &nbsp;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ-ஜியோ பொதுக் கோரிக்கை களுக்காக அறிவிக்கும் அனைத்துவித இயக்க நட வடிக்கைகளிலும் தொழிற் பயிற்சி அலுவலர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வது எனது ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. &nbsp;மேலும், தீர்மானங் களை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி அனைத்து கிளைகளிலும் உணவு இடைவேளை ஆர்ப் பாட்டம் நடத்துவது, பிப்-14 &nbsp;அன்று சென்னையில் மாநி லம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், ஜனவரி 6ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள வேலை &nbsp;நிறுத்தத்தில் கலந்து &nbsp;கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.