தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சியின் சவால்களும், தூய்மைப் பணியாளர்களின் அவலநிலையும்

19 May 2026, 12:51 am
தமிழக நகர்ப்புற உள்ளாட்சியின் சவால்களும், தூய்மைப் பணியாளர்களின் அவலநிலையும்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சியின் சவால்களும், தூய்மைப் பணியாளர்களின் அவலநிலையும்

தமிழகத்தில் வேகமாக அதிக ரித்து வரும் நகரமயமாக்க லுக்கு ஏற்ப, மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள் ளது. குடிநீர் விநியோகம், சாலை பராமரிப்பு, பாதாள சாக்கடை மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதே இந்த உள்ளாட்சி அமைப்புகளின் முதன்மைக் கடமையாகும்.

ஆனால், ’ஸ்மார்ட் சிட்டி’ போன்ற ஒன்றிய அரசின் திட்டங்களின் விளைவாக, உள் ளாட்சி துறை சந்திக்கும் நடை முறைச் சிக்கல்களும் தனியார்மய மாக்கல் போக்கும் கவலையளிப்ப தாக உள்ளன.

பொது இடங்களில் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டதால், தாகத்திற்காக வாங்கும் தண்ணீர் பாட்டில்களையும் இதர கழிவு களையும் மக்கள் பொதுவெளி யிலும், திறந்தவெளி வடிகால்களி லும் வீசும் கட்டாயத்திற்கு தள்ளப் படுகிறார்கள்.

இது சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. மேலும், வீடுகளில் மக்கும், மக்காத குப்பை களைப் பிரித்து வழங்கத் தவறும் போது அல்லது வாகனங்கள் வராத போது, அடுத்த நாள் வரை குப்பை களைத் தேக்கி வைக்க முடியாமல் மக்கள் அவதியுறுகின்றனர்.

சேக ரிப்புக்கு வரும் பேட்டரி வாகனங் கள் பழுதடைந்துள்ளதால், குப்பைகளை அப்புறப்படுத்து வதில் பெரும் காலதாமதம் ஏற்படு கிறது.

புறக்கணிக்கப்படும் தொழிலாளர் உரிமைகள் மாநகராட்சியே ஊதியம் வழங் கினாலும், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வெளி முகமைகள் மூல மாகவே தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இ

த னால், தூய்மைப் பணியாளர்களில் பெரும்பாலானோர் அத்தக்கூலிக ளாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்க ளாகவும் மாறும் அவலம் நீடிக்கி றது. குறைந்தபட்ச கூலிச் சட்டத் தின்படியான ஊதியம் வழங்கப்ப டுவதில்லை. மே தினத்திற்கான ஊதியத்துடன் கூடிய விடுமுறை மறுக்கப்படுகிறது.

புகைப்படத்து டன் கூடிய அடையாள அட்டையோ, முறையான மருத்து வக் காப்பீட்டுப் பயன்களோ கிடைப்பதில்லை. பழுதடைந்த வாகனங்களின் பராமரிப்புச் செலவைத் தொழிலாளர்களே ஏற் கும் அவலநிலை உள்ளது.

நிரந் தரப் பணியாளர்களுக்குக் கூட பணிப்பதிவேடு மற்றும் சம்பள ரசீதுகள் முறையாக வழங்கப்படு வதில்லை. உங்கள் குப்பை, உங்கள் பொறுப்பு என்ற விளம்பரப் பதாகைகளுக்குப் பின்னால், உள்ளாட்சியின் கடமைகளும், தொழிலாளர்களின் உரிமைகளும் தனியார்மயமாக்கல் என்ற பெயரில் நசுக்கப்படுகின்றன.

வரி செலுத்தும் பொதுமக்களின் நலனையோ, நகரைத் தூய்மை யாக்கும் தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தையோ கருத்தில் கொள் ளாத இந்த அவலநிலையை மாற்றி, புதிதாக தமிழத்தில் பொருப்பேற்றுள்ள தவெக அரசு தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளையும், நகர்ப்புறக் கட்ட மைப்பு வசதிகளையும் முறைப்ப டுத்த வேண்டியது காலத்தின் கட் டாயமாகும். - சக்திவேல்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.