தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிதியின்றித் தவிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் - கே.கந்தசாமி

12 Nov 2026, 9:07 pm
நிதியின்றித் தவிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் - கே.கந்தசாமி

நிதியின்றித் தவிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் - கே.கந்தசாமி

மக்களாட்சியின் அடித்தளமாகவும், எளிய மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காணும் உள்ளூர் அரசாங்கங்களாகவும் விளங்குபவை உள்ளாட்சி அமைப்புகள். அரசமைப்புச் சட்டத்தின் 73, 74-வது திருத்தங்கள் அவற்றுக்கு அதிகாரப் பகிர்வையும் நிதிச் சுயாட்சியையும் உறுதி செய்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட முடியாமல் முடக்கப்பட்டுள்ளன.

வராத நிதி, வழங்காத நிதி

16-வது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு வழங்கவேண்டிய சுமார் ரூ.20,054 கோடி இன்று வரை மாநில அரசுக்கு வந்து சேரவில்லை. “நிதி கொடுக்கிறோம்” என்று சொல்லும் ஒன்றிய நிதியமைச்சர், உள்ளாட்சிகளின் நிதி குறித்து மட்டும் மௌனம் காக்கிறார். மாநிலஅரசும் இந்த நிதியைப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

மாநில அரசின் நிலையும் இதுவே. 2026-ம் ஆண்டுதிருத்திய நிதிநிலை அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.29,863 கோடி ஒதுக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கை நிறைவேறியதும் துறைகளுக்கு நிதி பிரித்து வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஆறு மாதங்களாகியும் அந்த நிதி நகர்ப்புறஉள்ளாட்சிகளுக்கு வரவில்லை. சட்டமன்றம் ஒதுக்கிய நிதி எங்கே போனது என்று தெரியவில்லை. கடந்த அரசு ஒப்பந்தப்புள்ளி கோரிய பணிகளை மட்டுமே நகராட்சிகள் இப்போது செய்து வருகின்றன; புதிய பணிகளுக்குக் கோரிய நிதி ஒதுக்கப்படவில்லை.

பழனியில் பாதாளச் சாக்கடைப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன; மழைக்காலத்தில் மக்கள் நடக்கக்கூட முடியவில்லை. சாலை சீரமைப்புக்கு நிதி கேட்டு அனுப்பிய திட்ட மதிப்பீட்டை, “பாதாளச் சாக்கடைப் பணி 100 சதவீதம் முடிந்து சோதனை ஓட்டம்நிறைவடைந்த பிறகே நிதி” என்று அரசு திருப்பி அனுப்பிவிட்டது. பெயரளவுக்குப் பழுது பார்ப்பதோடுநிற்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சிகளின் நிலை. ஒன்றிய, மாநில அரசுகள் இரண்டுமே நிதிவழங்காமல் இருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் 73, 74-வது திருத்தங்களைக் கேலிக்கூத்தாக்குவதற்குச் சமம்.

பொது நிதிக்கும் வாய்மொழித் தடை

வார்டுகளுக்குச் சாக்கடை, சிறுபாலம், தெருவிளக்கு, குடிசைப் பகுதிகளுக்குச் சிமெண்ட் சாலை போன்ற அடிப்படைப் பணிகளுக்காக மன்ற உறுப்பினர்கள்கோரிக்கை வைத்தால், “நிதிநிலை மோசம்” என்று கூறி ஆணையர்கள் அதை மன்றப்பொருளாகக் கொண்டுவர மறுக்கின்றனர். உண்மையில், ஜூன் மாதத்துக்குப் பிறகு பொது நிதியில் எந்தப் பணியும் எடுக்கக் கூடாது என்று மாநில அரசு வாய்மொழிஉத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தெருவிளக்குக்குக்கூட நடவடிக்கைஇல்லை. மக்களுக்குப் பதில் சொல்ல முடியாமல்மக்கள் பிரதிநிதிகள் தவிக்கின்றனர். அலுவலர்களின் முடிவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வெறும்பார்வையாளர்களாக்குவது உள்ளாட்சி அமைப்புகளின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.

பார்வையாளர்களான மக்கள் பிரதிநிதிகள்

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. எங்கே தண்ணீர் தேங்கும், யார் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தவர்கள் வார்டு உறுப்பினர்களே. ஆனால் கள ஆய்வுகளுக்கு ஆணையர்கள் மட்டுமே செல்கின்றனர்; மேயர், துணை மேயர்,தலைவர், துணைத் தலைவர் யாரும் அழைக்கப்படுவதில்லை. உள்ளாட்சி அமைப்புகள் அரசுத் துறைகளின் கிளை அலுவலகங்கள் அல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் அரசாங்கங்கள். மக்கள்பிரதிநிதிகளைப் புறக்கணிப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது. பொது நிதியும் வார்டு நிதியும் இல்லாதநிலையில், மழை வெள்ளச் சேதங்களிலிருந்து மக்களைக் காக்க ஒவ்வொரு உள்ளாட்சிக்கும் உடனடியாக நிதிவிடுவிக்கப்பட வேண்டும்.திண்டுக்கல் மாநகராட்சி, பழனி நகராட்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், நீதிமன்ற வழக்குகளால் முடங்கிய பணிகளை விரைவுபடுத்தவும் கோரிதிண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் முதலமைச்சர்,துறைச் செயலாளர், இயக்குநர் ஆகியோரிடம் அளித்தமனுக்கள் ஐந்து மாதங்களாகக் கிடப்பில் உள்ளன. உறுப்பினர்களின் மனுக்களை விசாரித்து, திட்ட மதிப்பீடுசெய்து மன்றத்தில் வைப்பதுவும் நடக்கவில்லை. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், திங்கள்தோறும் ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் மக்கள் குறைதீர் நாளில் குவியும் கூடுதல்கூட்டத்தை தவிர்த்திருக்கலாம்.

நன்கொடை வசூலில் மரக்கன்றுகள்

சிறிய நகராட்சிகள்கூட 65,000 மரக்கன்றுகள் நட வேண்டும்; அதற்கான செலவை வசதி படைத்த

வர்களிடம் நன்கொடையாக வசூலிக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுஊழலுக்கும், நன்கொடையாளர்களுக்குச் சாதகமான நிர்வாகத்துக்கும் வழிவகுக்கும். அடிப்படைப் பணிகளுக்கே நிதி இல்லாதபோது, மரக்கன்றுகளைப் பராமரிக்கத் தேவையான வாகனங்களுக்கும் பணியாளர்களுக்கும் நிதி எங்கிருந்து வரும்? எவ்வளவு,யாரிடம் வசூலிக்கப்பட்டது என்பது மன்றங்களுக்குத் தெரியாது; எதுவும் மன்றப் பொருளாக வைக்கப்படவில்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை அதிகரித்துள்ள நிலையிலும், அவற்றைப் பறிமுதல் செய்யுமாறு மக்கள் பிரதிநிதிகள் கூறினாலும் அலுவலர்கள் செவிசாய்ப்பதில்லை.

குப்பை அரசியல்

அண்டை நான்கு மாவட்டங்களின் குப்பைகளையும் சேலத்தில் கொட்டி எரிஉலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் எரிஉலைக்கு எதிராக மக்களும் சுற்றுச்சூழல் நிபுணர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இது சேலம் மக்களின் வாழ்வாதாரத்தையும் உயிர்ப்பாதுகாப்பையும் அச்சுறுத்தும். திருப்பூர் மாநகராட்சிக் குப்பைகளை இடுவாய் ஊராட்சியின் பாறைக் குழியில்கொட்ட, எதிர்த்த பொதுமக்களையும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களையும் கைது செய்து மண்டபத்தில்அடைத்தனர்.

குப்பைகளை நான்கு வகையாகப் பிரித்து வாங்கப் பிரச்சாரமும் இல்லை, போதுமான பணி

யாளர்களும் இல்லை; இதற்கான பணியாளர்கள் வேறுபணிகளுக்கு மாற்றப்படுகின்றனர். பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களை விட்டுவிட்டு, பெட்டிக்கடைக்காரர்கள் மீது மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது. திருச்செந்தூர், திருவண்ணாமலை, மதுரை, பழனி போன்ற கோவில் நகரங்களுக்குக் கூடுதல் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க அரசாணை இன்னும் வெளியாகவில்லை.

தனியார்மயமும் காலியிடங்களும்

மதுரை (ரூ.2,377.48 கோடி), நாகர்கோவில் (ரூ.189.82 கோடி) பாதாளச் சாக்கடைப் பராமரிப்பு, தஞ்சாவூர், தூத்துக்குடியில் ரூ.220 கோடியில் வணிக வளாகங்கள், 25 ஆண்டுகளுக்கான நகர்ப்புறக் கட்டமைப்புக்கு ரூ.50 கோடியில் ஆய்வறிக்கை எனத் தனியார்மயத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. 12 மாநகராட்சிகளின் தூய்மைப்பணிக்கு மொத்தமாகக் கோரிய ஒப்பந்தப்புள்ளி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்டோரின் எதிர்ப்பால் ரத்தானது;இப்போது தனித்தனியாகக் கோரப்பட்டுள்ளது. இதனால் சேவைக் கட்டணங்களும் வரிகளும் கடுமையாக உயர்ந்து ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர்.மறுபுறம், ஆணையர், பொறியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஒரே ஆணையர் இரண்டு நகராட்சிகளைக் கவனிப்பதால், பல்லடம், தாராபுரம்போன்ற இடங்களில் இரண்டு மாவட்ட நிர்வாகங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது.

நவம்பர் 17 ஆர்ப்பாட்டம்

எனவே, மாநில அரசின் நிதியையும், ஒன்றிய அரசின் நிதியையும், வார்டு உறுப்பினர் நிதியையும் உடனே விடுவிக்க வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோடு இணைந்து செயல்பட வேண்டும்; உள்ளாட்சி ஜனநாயகத்தைப் பறிக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து, நவம்பர் 17அன்று தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மண்டலஅலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்தக் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும் என்பதேமக்கள் எதிர்பார்ப்பு.

கட்டுரையாளர் : பழனி நகர்மன்றத் துணைத் தலைவர்,

சிபிஐ(எம்) திண்டுக்கல் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.